மதுரை : மதுரை முத்துப்பட்டி அருகே ஒரே நாளில் 7 பேரை கடித்து குதறிய வெறிநாயால் மக்கள் பீதியில் உறைந்தனர். அங்கு முகாமிட்டுள்ள நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும்
.மாநகராட்சி 95வது வார்டு புதுக்குளம் 2வது பீட் பகுதியை சேர்ந்த செந்தில்பாண்டி மகன் சஞ்சய் குமார் 6. முதலாம் வகுப்பு படிக்கிறான். நேற்று அதே பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது வெறிநாய் ஒன்று துரத்தி கடித்தது. சிறுவன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடல் முழுவதும் நாயின் நகக்கீறல் விழுந்தது. வெறிநாய் அடுத்தடுத்து 4 சிறுவர், சிறுமியர், 3 பெரியவர்களை கடித்து குதறியது. இதில் ஒருவர் அரசு மருத்துவமனை ஓய்வு பெற்ற நர்ஸ். இவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறுவன் சஞ்சய்குமாரின் முகத்தில் 4 தையல் போடப்பட்டது. வெறிநாயால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர்.அப்பகுதி சரவணக்குமார்: இப்பகுதியில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது. நாய், பன்றிகள் நடமாட்டம் அதிகம். பிற பகுதிகளில் பிடிக்கும் நாய்களை இங்கு விடுகின்றனர். இங்கு முகாமிட்டுள்ள நாய்கள் துரத்துவதும், நாங்கள் காயம்படுவதும் வாடிக்கை. ஆனால் மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததில்லை. இப்போது ஒரே நாளில் 7 பேரை வெறிநாய் கடித்துவிட்டது. இனியாவது அதிகாரிகள் கருணை காட்டுவார்களா, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE