திருமங்கலம் : திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி யுவமதி 17, தேசிய கையெறிபந்து போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். பொருளாதார பிரச்னையால் பல போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கிறார்.
திருமங்கலம் கக்கன் காலனி முருகன் மகளான இவர், தடகளம் மற்றும் கையெறி பந்து போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2019--20ம் ஆண்டிற்கான தேசிய கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு கூட்டமைப்பின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கையெறிபந்து போட்டி திருச்சியில் நடந்தது. இதில் தமிழக அணியில் யுவமதி தங்கப்பதக்கம் வென்றார்.
அவர் கூறுகையில், ''மாற்றுத்திறனாளியான எனது தந்தை பெட்டிக்கடை வைத்துள்ளார். போதிய வருமானம் இல்லாத நிலையிலும் என்னை படிப்பு மற்றும் விளையாட்டில் ஊக்கப்படுத்தியதால் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறேன். பொருளாதார பிரச்னையால் வெளி மாநில, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. அரசு உதவி செய்தால் வெற்றிபெற உதவியாக இருக்கும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE