அவலுார்பேட்டை : நிலத்திற்கு சென்ற வாலிபர், கிணற்றில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவலுார்பேட்டை அடுத்த எதப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன் மகன் ஜனார்த்தனன்,30; இவரது மனைவி உமாதேவி,26; திருமணமாகி 7 ஆண்டாகும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் ஜனார்த்தனன் நேற்று முன்தினம் இரவு நிலத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் காலை வரை வீடு திரும்பவில்லை.சந்தேகமடைந்த அவரது மனைவி உமாதேவி, 26, கணவரை தேடி நேற்று காலை நிலத்திற்கு சென்றார். வழியில், சம்பத் என்பவரது பாசன தரை கிணற்றின் அருகே ஜனார்த்தனனின், கர்சீப் கிடந்தது.
சந்தேகமடைந்த உமாதேவி மேல்மலையனுார் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், தீயணைப்பு படையினர், கிணற்றில் இறங்கி வெகு நேரம் தேடி, ஜனார்த்தனனின் உடலை வெளியே எடுத்தனர்.புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE