பொது செய்தி

இந்தியா

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெண் விமானிகளால் மட்டும் இயக்கப்பட உள்ள விமானம்

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
பெங்களூரு: அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெண் விமானிகளால் மட்டும் ஏர் இந்தியா விமானம் ஒன்று இயக்கப்பட உள்ளது.வடதுருவம் வழியாக உலகின் மிக நீளமான விமானப் பாதையை ஏர் இந்தியாவின் இளம் கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் இந்த வராலாற்று சாதனையை படைக்க உள்ளனர்அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரையிலான 16,000 கி.மீ., நீளமுடைய சவால்

பெங்களூரு: அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெண் விமானிகளால் மட்டும் ஏர் இந்தியா விமானம் ஒன்று இயக்கப்பட உள்ளது.latest tamil news


வடதுருவம் வழியாக உலகின் மிக நீளமான விமானப் பாதையை ஏர் இந்தியாவின் இளம் கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் இந்த வராலாற்று சாதனையை படைக்க உள்ளனர்

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரையிலான 16,000 கி.மீ., நீளமுடைய சவால் நிறைந்த பாதையை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடக்க வேண்டும். சான்பிராஸ்ஸிஸ்கோவிலிருந்து புறப்படும் விமானம் வேறெங்கும் நிற்காமல் பெங்களூரு வந்தடையும்.

இத்தகைய சவால் நிறைந்த தூரத்தை கடப்பதற்கு அதிக்கப்படியான அனுபவமும், திறமையும் கூடிய தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தக் கூடிய விமானிகளால் மட்டுமே முடியும். பல காலமாக இத்தகைய நீண்ட விமான பயணத்திற்கு ஆண் விமானிகள் மட்டுமே அனுமதிக்க்ப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் வரலாற்றில் முதன் முறையாக பெண் விமானிகள் கூட்டாக இணைந்து வட துருவத்தின் மேலான இந்த நீளமான பாதையில் பறக்க உள்ளனர். விமானப் பயணத்தை தலைமயேற்று வழிநடத்தும் பொறுப்பு சோயா அகர்வால் என்ற பெண் கேப்டனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதுகுறித்து சோயா அகர்வால் கூறுகையில், ‛உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் வடதுருவத்தையோ அல்லது அதன் வரைபட்த்தையோ கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், நாங்கள் அதன் மீது வெற்றிகரமாக பறக்க உள்ளோம். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். போயிங்-777 விமானத்தில் கேப்டனாக கட்டளையிட இது எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. அதுவும், வடதுருவத்தின் மீது உலகின் மிக நீண்ட விமானப் பாதையில் பறப்பது மகிழ்ச்சியான அனுபவமாகும்' இவ்வாறு அவர் கூறினார்.

சோயா அகர்வால் கடந்த 2013ம் ஆண்டு ஏற்கனவே போயிங்-777 விமானத்தில் பெண் விமானியாக பறந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். தற்போது வடதுருவம் வழியா மிக நீண்ட பாதையில் பெண் விமானிகள் அடங்கிய குழு பறக்க உள்ளது பெரும் சாதனை நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
09-ஜன-202121:28:55 IST Report Abuse
Sundararaman Iyer Other than a direct flight from SFO to Bengaluru for the first time there is nothing new in this flight. Few years back on a womens day all ladies flight was organised by Air India. Many international flights are using the north pole route to reduce time and distance travel for destinations in the other side of the globe.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
09-ஜன-202120:59:54 IST Report Abuse
Ramesh Sargam வரவேற்கபடவேண்டிய மற்றும் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
V Sathyanarayanan - Chennai,இந்தியா
09-ஜன-202116:48:57 IST Report Abuse
V Sathyanarayanan வாழ்த்துக்கள் பெண்கள் குழுவிற்கு. சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X