மஹா., மருத்துவமனையில் தீவிபத்து: 10 பச்சிளங்குழந்தைகள் பலி

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
பண்டரா: மஹாராஷ்டிரா மாநிலம் பண்டரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் தீயில் பரிதாபமாக கருகி இறந்தன.மஹாராஷ்டிராவின் பண்டராவிலுள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பச்சிளங்குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர்.மொத்தம் 17 குழந்தைகள்

பண்டரா: மஹாராஷ்டிரா மாநிலம் பண்டரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் தீயில் பரிதாபமாக கருகி இறந்தன.



latest tamil news


மஹாராஷ்டிராவின் பண்டராவிலுள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பச்சிளங்குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர்.


மகாராஷ்ட்ர மாநிலம், பந்தாராவில் மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு உள்ளது. இதில், 17 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தன. இன்று அதிகாலை 2 மணியளவில் சிறப்பு வார்டில் தீப்பிடித்தது. புகை வந்ததை நர்ஸ் பார்த்துவிட்டு மருத்துவமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ வேகமாக பரவியது. வார்டு முழுவதும் கடும் புகை மூட்டமானது. இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் இறந்தன. எல்லாமே ஒரு மாதம் முதல் மூன்று மாதமே நிரம்பிய குழந்தைகள்தான். புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி இறந்துள்ளன. எஞ்சிய 7 குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் மகாராஷ்ட்ராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. முழு விசாரணை நடத்த முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்ட்ராவில் நடந்த சம்பவம் இதயத்தை பிழியும் அளவுக்கு மிகுந்த துயரத்தை அளித்துள்ளது. விலைமதிப்பில்லா இளம் உயிர்களை இழந்திருக்கிறோம்; குழந்தைகளின் பெற்றோர்களின் துயத்தில் பங்கெடுக்கிறேன்; காயமுற்ற குழந்தைகள் மிக விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், காங்கிரஸ் எம்பி ராகுல் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

latest tamil news



மொத்தம் 17 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 7 குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை. இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
09-ஜன-202121:05:42 IST Report Abuse
Ramesh Sargam மனம் மிகவும் வேதனை படுகிறது. சரியாக பராமரிக்கப்படாவிட்டால், இப்படித்தான் நிகழும். இதில் மேலும் ஒரு வேதனை என்னவென்றால், இந்த பரிதாப நிகழ்வை வைத்து இப்பொழுது வேலையில்லா அரசியல்வாதிகள் ஒரு சிலர் அரசியல் செய்ய இறங்கிவிடுவார்கள். அதுதான் தாங்க முடியாது வேதனை.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
09-ஜன-202115:24:54 IST Report Abuse
Vena Suna காப்பாத்த தான் ஆஸ்பத்திரி..... எரிக்க அல்ல.... அதற்கு சுடு காடு இருக்கின்றது.... இதற்காக தான் NEET வேண்டும்....நல்ல doctors வேண்டும்...இல்லை என்றால் இப்படி தான்.....எங்கும் திறமை தான் வேண்டும்...
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
09-ஜன-202115:17:24 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நடிகயின் வீட்டை இடிக்கும் வேகத்தில் இருந்த மஹாராஷ்டிரா அரசு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது ,,இதை செய்தியாய் போட்டால் அவரை கொலை வழக்கில் உள் ளளே போடும் ..இத்தாலியா அடிமை அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X