பண்டரா: மஹாராஷ்டிரா மாநிலம் பண்டரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் தீயில் பரிதாபமாக கருகி இறந்தன.

மஹாராஷ்டிராவின் பண்டராவிலுள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பச்சிளங்குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர்.

மொத்தம் 17 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 7 குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை. இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE