பொது செய்தி

இந்தியா

எருமேலி பேட்டை துள்ளல், திருவாபரண பவனிக்கு கடும் கட்டுப்பாடுகள்

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சபரிமலை: எருமேலி பேட்டை துள்ளல், திருவாபரண பவனிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை முறையே ஜன.,11, 12ல் நடைபெறுகிறது.சபரிமலையில் மகரவிளக்கு விழா ஜன., 14ல் நடக்கிறது. இதற்கு முன்னோடியாக நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் எருமேலி பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண பவனி. ஜன., 11ல் நடைபெறும் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் குழுவின் பேட்டை துள்ளலில் கொரோனா இல்லை
erimeli, ornaments box, restrictions, corona, sabarimala, எருமேலி, பேட்டை, துள்ளல், திருவாபாரண பெட்டி, பவனி கட்டுப்பாடுகள்

சபரிமலை: எருமேலி பேட்டை துள்ளல், திருவாபரண பவனிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை முறையே ஜன.,11, 12ல் நடைபெறுகிறது.

சபரிமலையில் மகரவிளக்கு விழா ஜன., 14ல் நடக்கிறது. இதற்கு முன்னோடியாக நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் எருமேலி பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண பவனி. ஜன., 11ல் நடைபெறும் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் குழுவின் பேட்டை துள்ளலில் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் 50 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இவர்கள் பேட்டை த்துள்ளலுக்கு பின்னர் பெருவழிப்பாதை வழியாக சபரிமலை வருவது வழக்கம்.


latest tamil news


ஆனால் இந்த முறை இவர்கள் எருமேலியில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த பின்னர் வாகனங்களில் பம்பை வந்து சன்னிதானம் வரவேண்டும்.ஜன., 12ல் பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது. இதற்கும் போலீஸ் உட்பட 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இது காட்டுப்பாதை வழியாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜன.,12 மதியம் பந்தளத்தில் இருந்து புறப்படும் பவனி ஜன., 14 மாலை சன்னிதானம் வந்தடையும். வழியில் எங்கும் வரவேற்பு கிடையாது.ஜன., 14ல் மகரவிளக்கு விழா நடைபெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
09-ஜன-202121:36:18 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy உண்டியல்ஸ் மிக பெரிய எதிரியாக கருதுவது சபரிமலை பக்தர்களைத்தான் , காரணம் மாற்று மத சக்திகளின் பிடியில் கழிசடை கமுனிஸிட் உண்டியல்ஸ் சென்றுவிட்டது தான். இந்த வருடம் கேரளத்தில் உண்டியல்ஸ் முழுமையாக ஒழிக்க கேரளா ஹிந்துக்கள் முன்வரவேண்டும். தமிழக , மேற்கு வங்க தேர்தலைவிட கேரளா தேர்தல் கவனிக்கப்படவேண்டியது , வேலை செய்யப்பட வேண்டியுள்ளது
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
09-ஜன-202121:14:17 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy கட்டுப்பாடெல்லாம் ஹிண்டுகளுக்கே - மார்க்சிய ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X