பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்கு தயாராகும் மண் பானைகள்; வண்ணம் தீட்டும் பணி தீவிரம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
ஈரோடு: பொங்கல் விழாவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், மண்பானை விற்பனை சூடு பிடிக்கவில்லை. ஆனாலும், விற்பனையாகும் நம்பிக்கையில், ஈரோடு மாநகர சாலையோரங்களில், விற்பனைக்காக பானைகள் குவிக்கப்பட்டு வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது.இதுகுறித்து மண்பானை வியாபாரி ஒருவர் கூறியதாவது: நாகரிகத்தால் தற்போது, மண் பானை பயன்பாடு இல்லை என்றாலும், பொங்கலுக்கு மண் பானையில்

ஈரோடு: பொங்கல் விழாவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், மண்பானை விற்பனை சூடு பிடிக்கவில்லை. ஆனாலும், விற்பனையாகும் நம்பிக்கையில், ஈரோடு மாநகர சாலையோரங்களில், விற்பனைக்காக பானைகள் குவிக்கப்பட்டு வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது.


இதுகுறித்து மண்பானை வியாபாரி ஒருவர் கூறியதாவது: நாகரிகத்தால் தற்போது, மண் பானை பயன்பாடு இல்லை என்றாலும், பொங்கலுக்கு மண் பானையில் பொங்கல் வைக்கவே பலர் விரும்புகின்றனர். அரசு, தனியார் அலுவலக பெண், ஆண் ஊழியர்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மதுரை பகுதி பானைகள் உறுதியாக இருக்கும் என்பதால், அங்கிருந்து தருவிக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. அரைப்படி, ஒரு படி, ஒன்றரைப்படி, இரண்டு படி அளவுகளில், வண்ணம் தீட்டப்படாத பானைகள், 150 ரூபாய் முதல், 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், 200 ரூபாய் முதல், 450 ரூபாய் வரை உள்ளது. மண், எரிபொருள், ஆள்கூலி, போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டை காட்டிலும் சிறிது விலை உயர்ந்துள்ளது. மற்ற காலங்களில் உலோக பாத்திரங்களை பயன்படுத்தும் நகரவாசிகள், பொங்கலுக்கு மட்டும், உடல் நலத்துக்கு ஆரோக்கியமான மண் பாத்திரங்களை பயன்படுத்தினால், மண் பானை தயாரிப்பாளர், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X