பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் ஓடையில் கட்டிய சுற்றுச்சுவர் இடிப்பு

Added : ஜன 09, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: மழைநீர் ஓடையில், தனிநபர் கட்டிய சுற்றுச்சுவரை, மக்கள் இடித்தனர். சேலம், ஜருகுமலையில் உற்பத்தியாகும் மழைநீர், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையை கடந்து, தாசநாயக்கன்பட்டி வழியாக, பூலாவரி ஏரியை அடைகிறது. தாசநாயக்கன்பட்டியில், தனியார் பட்டா நிலம் வழியாக மழைநீர் ஓடை செல்கிறது. அந்த நிலத்தை விலைக்கு வாங்கியவர், சுற்றுச்சுவர் கட்டினார். இதனால், அகலமான ஓடைக்கு

பனமரத்துப்பட்டி: மழைநீர் ஓடையில், தனிநபர் கட்டிய சுற்றுச்சுவரை, மக்கள் இடித்தனர். சேலம், ஜருகுமலையில் உற்பத்தியாகும் மழைநீர், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையை கடந்து, தாசநாயக்கன்பட்டி வழியாக, பூலாவரி ஏரியை அடைகிறது. தாசநாயக்கன்பட்டியில், தனியார் பட்டா நிலம் வழியாக மழைநீர் ஓடை செல்கிறது. அந்த நிலத்தை விலைக்கு வாங்கியவர், சுற்றுச்சுவர் கட்டினார். இதனால், அகலமான ஓடைக்கு பதில், மாற்றுப்பாதையில் குறுகிய வழியில், மழைநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. மழைநீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டதால், தி.மு.க., - அ.தி.மு.க., - கம்யூ., உள்ளிட்ட கட்சியினர், மக்கள், நேற்று, அங்கு திரண்டனர். ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற, வருவாய்த்துறை, போலீசாரிடம் வலியுறுத்தினர். தொடர்ந்து, ஒரு இடத்தில், ஓடையில் போடப்பட்டிருந்த இரும்பு கேட் பூட்டை உடைத்து திறந்தனர். மற்ற இரு இடங்களில், ஓடையில் கட்டியிருந்த சுற்றுச்சுவரை, இயந்திரம் மூலம், இடித்து அகற்றும் பணியில், மக்கள் ஈடுபட்டனர். இதையறிந்து, அங்கு வந்த, டி.எஸ்.பி., உமாசங்கர், பணியை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரத்தில், நிலத்தை அளவீடு செய்து, மழைநீர் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார். இதனால், மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X