சேலம்: மாவட்டத்தில், நேற்றைய நிலவரப்படி, 86.30 சதவீத நுகர்வோர், பொங்கல் பரிசு பெற்றுள்ளனர். அரிசி அட்டையாக மாறிய அனைவருக்கும், பொங்கல் பரிசு விடுபடாமல் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,583 ரேஷன் கடை கட்டுப்பாட்டில், 10 லட்சத்து, 12 ஆயிரத்து, 499 கார்டுதாரர்களுக்கு, 2,500 ரூபாயுடன், பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகம், கடந்த, 4ல் தொடங்கியது. வரும், 12 வரை பெறலாம். விடுபட்டவர்களுக்கு, 13ல் கிடைக்கும். நுகர்வோருக்கு, பொங்கல் பரிசு பணம் வழங்க, மாவட்ட தேவை, 252.08 கோடி ரூபாய். அதில், முதல் கட்டமாக, 239.23 கோடி ரூபாய், இரண்டாம் கட்டம், 1.40 கோடி, மூன்றாம் கட்டம், 10.12 கோடி ரூபாய் நிதி, அடுத்தடுத்து ஒதுக்கி வரப்பெற்றுள்ளது. அதில், நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, 8 லட்சத்து, 73 ஆயிரத்து, 630 கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு பெற்றுள்ளனர். இது, 86.30 சதவீதம். இன்னும், நான்கு நாளில், 100 சதவீத வினியோகத்தை முடித்து விடுவோம் என, கூட்டுறவு அதிகாரிகள் கூறினர். சர்க்கரை கார்டுதாரர்கள், 26 ஆயிரத்து, 411ல், அரிசி கார்டுக்கு மாறிய, 15 ஆயிரத்து, 665 பேருக்கும், பொங்கல் பரிசு வழங்கப்படும். அதற்காக, தேவையெனில் நான்காம் தவணையாக, 2.35 கோடி ரூபாய், மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு, அறிவித்தபடி, விடுபடாமல் அனைவருக்கும் வழங்கப்படும் என, சரக கூட்டுறவு பதிவாளர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE