பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
சேலம்: தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு, தலைமை வகித்து, கூட்டமைப்பு தலைவர் காவிரி தனபாலன் கூறியதாவது: மத்திய அரசு, உடனே, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்திய விளை நிலத்துக்கு, உரிய இழப்பீடு கேட்டு, 10 ஆண்டாக போராடும் விவசாயிகளின் கோரிக்கையை

சேலம்: தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு, தலைமை வகித்து, கூட்டமைப்பு தலைவர் காவிரி தனபாலன் கூறியதாவது: மத்திய அரசு, உடனே, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்திய விளை நிலத்துக்கு, உரிய இழப்பீடு கேட்டு, 10 ஆண்டாக போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆவின் நிர்வாகம், உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலை, தங்கு தடையின்றி, மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி, டில்லி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஜனநாயக நாட்டில் எழும் பிரச்னைக்கு, பேச்சுவார்த்தை தான் தீர்வு. அதனால், மத்திய அரசு, ஆக்கப்பூர்வ பேச்சை தொடங்கி, நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்திப்பது; அவரிடம், மூன்று வேளாண் சட்ட மசோதாவின் தமிழாக்கம் பெற்று, தெளிவுற ஆராய்ந்து, எதிர்ப்பது, ஆதரிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X