பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் பிரச்னையை விவாதிக்க எம்.எல்.ஏ.,க்கள் தயாரா? கிழக்கு மாவட்ட தி.மு.க., சவால்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
சேலம்: 'அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தொகுதிகளில், அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து விவாதிக்க தயாரா' என, கேள்வி எழுப்பி, சேலம், கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளது.சேலம், கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், 315 இடங்களில், மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில், 'அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம்' என்ற பதாகையில், மக்கள் கையெழுத்திட்டனர். அவை,

சேலம்: 'அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தொகுதிகளில், அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து விவாதிக்க தயாரா' என, கேள்வி எழுப்பி, சேலம், கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளது.


சேலம், கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், 315 இடங்களில், மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில், 'அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம்' என்ற பதாகையில், மக்கள் கையெழுத்திட்டனர். அவை, சேலத்தில் உள்ள மாவட்ட பொறுப்பாளர் முகாம் அலுவலகத்தில், நேற்று ஒப்படைக்கப்பட்டது. பொறுப்பாளர் சிவலிங்கம் பெற்றுக்கொண்டார். பின், சிவலிங்கம் கூறியதாவது: பெண்களுக்கு தனி கழிப்பிடம், பொது கழிப்பிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் பாதிக்கப்பட்டுள்ளோம் என, குற்றம்சாட்டினர். மலைக்கிராமங்களில், ரேஷன் கடை, மாணவ, மாணவியருக்கு, இணையவழி வசதி கிடையாது. மயானம் இல்லாத பல கிராமங்கள்; மயானம் இருந்தால் தட பிரச்னை என, கிராமங்கள் மேம்படுத்தாமல் இருப்பதாக குற்றம்சாட்டினர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், நான்கு தொகுதிகளில், கள ஆய்வு நடத்தினால், பிரச்னைகளை சுட்டிக்காட்டி விவாதிக்க நான் தயார். அதை, சவாலாக கூறுகிறேன். பொள்ளாச்சி விவகாரம், அ.தி.மு.க., முகத்திரையை கிழித்துவிட்டது. மக்கள் எதிர்ப்பால், கிழக்கில், நான்கு தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றிபெறும். அப்போது, மக்களின் அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X