புதுடில்லி: இந்தியாவில், கொரோனாவில் இருந்து நேற்று, 19,253 பேர் நலமடைந்தனர். இதனையடுத்து, ஒரு கோடியே 56 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் .
சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,நேற்று(ஜன.,08) ஒரே நாளில் 18,222 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 4 லட்சத்து 31 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 19,253 பேர் நலமடைந்ததை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 ஆயிரத்து 651 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 228 பேர் உயிரிழந்ததால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து50 ஆயிரத்து 798 ஆக அதிகரித்தது.
தற்போது, 2 லட்சத்து 24 ஆயிரத்து 190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE