சென்னை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர பாடுபடுவோம் என முதல்வரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்றைய அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: கட்சியே எனது குருதி என ஓடிக்கொண்டுள்ளது. தேர்தல் அறிவப்பதற்கு முன்பு அதுதொடர்பான பணிகளை நாம் முடிக்க வேண்டும்.ஒவ்வொரு பூத்திற்கும் 5 குழுக்களை அமைக்க வேண்டும்.தேர்தல் வியூகத்தை சரியாக செயல்படுத்த வேண்டும். திட்டம் போடும் தேர்தல் வியூகத்தை அமைத்து தேர்தலை சந்தித்தால், வெற்றி உறுதி.
கவர்னரை சந்தித்து ஸ்டாலின் அளித்த புகார் மனுவில் துளியளவும் உண்மையில்லை. பொய்யான அறிக்கைகளை முறியடிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க தயார் ஆனால், அவர் விவாதத்திற்கு வரவில்லை. திமுக மன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது உள்ள வழக்குகளை மறைக்கவே அதிமுக அரசு மீது ஸ்டாலின் பொய் புகார் தெரிவிக்கிறார். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி அதிமுக நல்லாட்சிக்கு சான்று.
பெண்கள் குறித்து இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலின், பிஞ்சிலே பழுத்துவிட்டீர்கள்.அவரது வளர்ப்பு அப்படியுள்ளது. ஜெயலலிதா நினைவிடம் 30 நாட்களுக்குள் திறக்கப்படும்.ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லம் நினைவில்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மீண்டும் ஆட்சி மலர பாடுபடுவோம். என்னை முதல்வராக அறிவித்த துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு கோடானு கோடி நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
மோசமான வைரஸ் திமுக

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், கொரோனாவை விட மோசமான வைரசான திமுகவை 2021ம் ஆண்டில் அரசியலை விட்டு விரட்டியடிக்க வேண்டும். எம்ஜிஆர் வாழ்த்துடனும், ஜெயலலிதாவின் ஆசியுடனும் வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி அதிமுக. ஆளுங்கட்சிக்கு இவ்வளவு நல்ல பெயர் இருந்ததாக கருதவில்லை. அந்தளவிற்கு நல்ல பெயர் உள்ளது. அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டதாக அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடனும் கூறுகின்றனர்.
திமுகவின் ஊழல், துரோகங்கள், அரசின் நல்லத்திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். அதிமுகவில் தொண்டர்கள் தான் எஜமானர்கள். அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE