தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால், புது கட்சி துவங்கிறது சரிபட்டு வராதுன்னு, மு.க. அழகிரி நினைக்கிறார். அதனால், கட்சி துவங்காமல், தன் ஆதரவாளர்களை, 234 தொகுதிகளிலும் சுயேட்சையா நிறுத்த போகிறாராம்... தன் ஆதரவாளர்கள் குறைந்த ஓட்டு வாங்கினாலும், அது, தி.மு.க.,வின் வெற்றியை பாதிக்கும்னு, அழகிரி கணக்கு போட்டுள்ளார். சுயேட்சையா போட்டிப் போட யாரெல்லாம் ஆர்வமா இருக்காங்கங்கற பட்டியலை தயார் செய்ய கூறியுள்ளார். இதனால், அழகிரி ஆதரவாளர்கள், ஆள் தேடும் வேலையை ஆரம்பித்துள்ளனர்...!
காங்., பிரமுகரின் தத்துவம்!
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, ஏகப்பட்ட நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளனர். செயல் தலைவரான மோகன் குமாரமங்கலம், தனக்கு பொதுச் செயலர் பதவி கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தாராம்... ஆனால், தங்கபாலு, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் மகன்களுக்கு பொறுப்பு அளித்த காங்கிரஸ் மேலிடம், மோகன் குமாரமங்கலத்துக்கு பொறுப்பு வழங்காததால, கடுப்பான அவர், ‛கட்சியில அப்பா இல்லாத மகனா இருக்கக் கூடாது... இல்லை, பணமில்லாத செயல் வீரனா ஒருபோதும் இருக்கக் கூடாது'ன்னு, கடுமையா விமர்சனம் செய்துள்ளார்.
‛இதெல்லாம் பெரிய விஷயமில்லை...!

சட்டசபைத் தேர்தலில், த.மா.கா., தனி சின்னத்தில்தான் போட்டியிடும்னு, அக்கட்சித் தலைவர் வாசன் கூறியுள்ளார். இதை, அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர் ஒருவர், முதல்வர் பழனிச்சாமியிடம் சுட்டிக்காட்ட, ‛இதெல்லாம் பெரிய விஷயமில்லை... கட்சிக்காரங்களை குஷிப்படுத்துறதுக்காக பேசியிருப்பாரு'ன்னு முதல்வர் சொல்லிட்டாராம்... அதோட, ‛மக்கள் நல கூட்டணியில் தனி சின்னத்தில், த.மா.கா., போட்டியிட்டு பெற்ற ஓட்டு விவரங்களை பாருங்க'ன்னு சொல்லி, ஒரு பட்டியலையும் அந்த தலைவர்கிட்ட முதல்வர் காட்டினாராம்... முதல்வரின் புள்ளி விபர கணக்கை பார்த்து, புல்லரித்து போயிட்டாராம், அந்த மூத்த தலைவர்...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE