பொது செய்தி

இந்தியா

ஜன.,16 முதல் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின், 'ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனெகா' நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, கொரோனாவுக்கு எதிரான, 'கோவிஷீல்ட்' தடுப்பூசி தயாரிக்கும் பணியை, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த, 'சீரம்' நிறுவனம், நம் நாட்டில் மேற்கொள்கிறது.தெலுங்கானா
corona, coronavirus, covid19, vaccination, covishield, covaxin,  health workers, governmentofindia, Pmmodi, health seceretary, barath biotech, seeram institute, கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, கோவிஷீல்ட், கோவாக்சின், தடுப்பூசி, பிரதமர் மோடி, சீரம் நிறுவனம், பாரத் பயோடெக்,  சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், முன்னுரிமை

புதுடில்லி: வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின், 'ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனெகா' நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, கொரோனாவுக்கு எதிரான, 'கோவிஷீல்ட்' தடுப்பூசி தயாரிக்கும் பணியை, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த, 'சீரம்' நிறுவனம், நம் நாட்டில் மேற்கொள்கிறது.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது.இந்த இரு தடுப்பூசிகளுக்கும், மத்திய அரசு சமீபத்தில் அவசரகாலத்தில் பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்தது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.


latest tamil news
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: நாட்டில் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கும். முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கும், அதனை தொடர்ந்து, இணை நோயுள்ள 50 வயதுக்கு மேற்பட்ட 27 கோடி பேருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி குறித்தும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து, உயர் மட்ட அளவில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. Vensuslaus - Nagercoil,இந்தியா
09-ஜன-202123:48:58 IST Report Abuse
J. Vensuslaus Scientists have recently discovered that the Pfizer-BioNTech vaccine prevents corona’s highly infectious variant also. It is unsure whether the other vaccines have this capability. Therefore, India should vaccinate its population with the Pfizer-BioNTech vaccine so the injected people are immune to corona virus and its variant.
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
09-ஜன-202117:22:15 IST Report Abuse
ShivRam ShivShyam தை பிறந்தால் வழி பிறக்கும்
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
09-ஜன-202117:01:22 IST Report Abuse
ShivRam ShivShyam "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் சான்றோர் வாக்கு பொய்க்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X