பொது செய்தி

இந்தியா

வாட்ஸ் ஆப் மீது அதிருப்தி: டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு வரவேற்பு

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: வாட்ஸ் ஆப் செயலியின் புதிய சேவை நிபந்தனைகள் மற்றும் ரகசிய கொள்கைகளால் காரணமாக, டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.வாட்ஸ் ஆப் செயலியில் யார் வேண்டுமானாலும், என்ன தகவலை வேண்டுமானாலும் பதிவிட முடியும். பகிர்ந்து கொள்ளவும்
Whatsapp, Telegram, signal, privacypolicy,  வாட்ஸ் ஆப்,  டெலிகிராம், சிக்னல், செயலி, பதிவிறக்கம்

புதுடில்லி: வாட்ஸ் ஆப் செயலியின் புதிய சேவை நிபந்தனைகள் மற்றும் ரகசிய கொள்கைகளால் காரணமாக, டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

வாட்ஸ் ஆப் செயலியில் யார் வேண்டுமானாலும், என்ன தகவலை வேண்டுமானாலும் பதிவிட முடியும். பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதனால் பல்வேறு சிக்கல்களை வாட்ஸ் ஆப் எதிர்கொண்டது. இதையடுத்து பதிவுகளை பகிர்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஒரு பதிவை அதிக பட்சம் 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும், அதிகம் பகிரப்பட்ட பதிவுகளை ஒரு முறை மட்டுமே மீண்டும் பதிவிட முடியும் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டன. இருந்தும் பிரச்னைகள் குறையவில்லை. இதையடுத்து முக்கிய விதிமுறைகளை வாட்ஸ் ஆப் அமல்படுத்த உள்ளது. பகிரப்படும் தகவலின் உண்மைத் தன்மைக்கு பகிர்பவரே பொறுப்பு உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. பயனாளர்களின் மொபைல் எண், இருப்பிடம், புகைப்படம், வீடியோ உள்ளிட்ட தகவல்கள் சேமித்து வைக்கப்படும். அந்த அம்சத்துடன் கூடிய விதிமுறையை ஏற்றால் மட்டுமே அந்த அலைபேசியில் செயலி தொடரும். இல்லையெனில் செயலி அழிந்துவிடும். இந்த நடைமுறையை பிப்.,8 முதல் அமல்படுத்த இருப்பதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.


latest tamil news
இதனால், ஏராளமான பயனாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். சில பிரபலங்கள் சிக்னல் செயலியை பயன்படுத்தும்படியும், இன்னும் சிலர் வாட்ஸ் ஆப் செயலிக்கு மாற்றாக வேறு செயலியை பயன்படுத்தும்படி தெரிவித்தனர். இதனையடுத்து சிக்னல், டெலிகிராம் செயலியை, கடந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதில் சிக்னல் செயலியில் பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை, கடந்த 38 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் புதன் அன்று, 1,600 பேர் பதிவிறக்கம் செய்த நிலையில், கடந்த 6ம் தேதி மட்டும் 2,200 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆப்பிள் ஐஸ்டோரில், அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் செயலியில் சிக்னல் செயலி முதலிடத்தை பிடித்துள்ளது. அதேநேரம். வாட்ஸ்ஆப்பை பதிவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 11 % குறைந்துள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜன-202105:50:58 IST Report Abuse
தல புராணம் டெலெக்ராம் ரஷியாக்கரானோடாது.. ஃபேஸ்புக்குலே மாஞ்சு மாஞ்சு எல்லாத்தையும் போட்டுட்டு வாட்ஸ்அப்புலே சேவை சரியில்லைன்னு சொல்றது தமாஸ் தான்..
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
10-ஜன-202104:21:09 IST Report Abuse
spr தாற்காலிக மகிழ்ச்சிக்கு ஒரு செய்தி "Signal is meant for direct communications between people. It does not have dedicated business accounts for small, medium enterprises or larger enterprises like WhatsApp does.if a business joins Signal as a regular account to contact users, you will always have the option of blocking any contact.ஆனால் இந்த செயலியை உருவாக்கிய நிறுவனர்தான் வாட்சாப்பை உருவாக்கி வெற்றி கண்டவர் எனவே கொஞ்ச நாளில் அவர் இதை விலைக்கு வாங்குவார் அப்பொழுது மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம் .................. ஆனால் வாட்சாப் செயலியை விட்டுவிடலாமென்றால், மோடி அரசு வாட்சாப் செயலியோடு உங்களை இணைத்துக் கொள்ளவில்லையென்றால் குடியுரிமை இல்லை என்று கூடச் சொல்லலாம் பொறுத்திருந்து பார்க்கலாம்
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
09-ஜன-202122:00:56 IST Report Abuse
spr இதெல்லாம் ஒரு சப்பை மேட்டர். ஏற்கனவே நாம் பயன்படுத்தும் கூகிள் முகநூல் போன்றவை மறைமுகமாக நம் அனுமதியுடன் நம் அந்தரங்கத் தகவல்களைத் திருடிக்கொண்டுதான் இருக்கின்றன. நம் நாட்டுத் கைபேசிச் செயலிகள் அனைத்தும் நம்மைக் குறித்த செய்திகளை நம் மூலமாகவே சேகரித்து விற்கின்றன. அரசு செயல்படுத்திய ஆதார் விவரங்கள் பிறருக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்றொரு செய்தி சிலகாலம் உலாவி வந்தது. இதனால் எல்லாம் நம் அந்தரங்க விவரங்கள் எந்த அரங்கங்களில் இருக்கிறது என எவரும் அறியோம். நாம் சிறிதும் எதிர்பாராமல் நமக்கு வரும் குறும்செய்திகளே அதற்குச் சான்று இங்கே பிரச்சினை அந்த நிறுவனம் ஒளிவு மறைவின்றி எங்கள் கட்டுப்பாடுகளுக்கு இணங்கினால் பயன்படுத்து இல்லையேல் வெளியேறு இன்ச் சொன்னதால் நம் அஹங்காரம் அதனை ஏற்க மறுக்கிறது அந்த நிறுவனம் டிஜிட்டல் முறைப் பணப் பரிவர்தனையைத் தொடங்கி இப்பொழுது வணிகப் பரிமாற்றங்களுக்கு உதவ நம் விவரங்களை பிறருக்கு விற்கப் போகிறோம் என வெளிப்படையாக அறிவித்திருக்கிறது ஏற்கனவே முறையான விழிப்புணர்வு இல்லாமல், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களும் துணை தராமல் அரசு மானியம் குறித்த முழு விவரங்கள் ஆதார் என் வங்கி கணக்கு எண் இவற்றுடன் எக்ஸெல் பட்டியலில், இணையத்தில் கிடைக்கிறது என்பது செய்திப் பத்திரிக்கைகள் குறிப்பிடும் செய்தியே எனவே இது குறித்தெல்லாம் என்ன கவலை நம்மைக் குறித்த விவரங்கள் யாரிடம் போனால் நமக்கென்ன? ஆனால் வயதான முதியவர்களுடன் குரல் வடிவில் பேச, முகம் பார்க்க உதவுவதால் இன்னொரு கைபேசியை வாங்கி அதில் வாட்சாப் மட்டுமே வைத்துப் பயன்படுத்துவோம் நிதி வணிகம் இவற்றுக்கு வேறொன்றைப் பயன்படுத்துவோம் இதற்கும் அவர்கள் ஏதேனுமொரு கட்டுப்பாடு கொண்டு வரலாம் எந்த வகையிலும் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கும் மோடி அரசு அவர்களுக்கு உதவும் நமக்கும் வேறு வழியில்லை இல்லையேல் வாட்சாப்பை விட்டு விலகியிருக்க கற்றுக் கொள்வோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X