தர்மபுரி: 'சபரிமலை, ஐயப்பன் கோவில் பிரசாதத்தை தபாலில் பெற, முன்பதிவு செய்து கொள்ளலாம்' என, தர்மபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஸ்ரீஹரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சபரிமலை ஐயப்பன் கோவிலில், தபால் மூலம் பிரசாதம் பெறுவதற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியுள்ளது. மண்டல மகரவிளக்கு சீசனையொட்டி, திருவிதாங்கூர் தேவஸ்தானமும், தபால் துறையும் இணைந்து, பிரசாதத்தை தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி கோட்டத்தில் உள்ள, தர்மபுரி தலைமை அஞ்சலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள, 30 துணை அஞ்சலகங்களில், இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. இதில், அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பார்சலின் விலை, 450 ரூபாய். ஒருநபர், ஒரு விண்ணப்பத்தில் அதிகபட்சமாக, 10 பிரசாத பாக்கெட்டுகளை பெற முன்பதிவு செய்யலாம். இந்த பிரசாதம், 'ஸ்பீடு போஸ்ட்' மூலம், முன்பதிவு செய்த பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், வீட்டிலிருந்தே ஐயப்பனின் அருளை பெற்று மகிழ, பொதுமக்கள் அனைவரும், தர்மபுரி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம். மேலும் விபரம் பெற, 88836-68199 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE