பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி விவசாயிகளுக்கு ரூ.139.72 கோடி கடன் தள்ளுபடி

Added : ஜன 09, 2021
Share
Advertisement
தர்மபுரி: ''தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு, வேளாண் கடனாக, 139.72 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் அன்பழகன் பேசினார்.காரிமங்கலம் தாலுகாவில், பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்கி, அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: தமிழக விவசாயிகளின் கடன் சுமையை போக்கும் வகையில், அரசு அறிவித்த கடன் தள்ளுபடி திட்டம், 2016ன் படி, கூட்டுறவு நிறுவனங்களில் நிலுவையில் இருந்த, சிறு

தர்மபுரி: ''தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு, வேளாண் கடனாக, 139.72 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் அன்பழகன் பேசினார்.


காரிமங்கலம் தாலுகாவில், பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்கி, அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: தமிழக விவசாயிகளின் கடன் சுமையை போக்கும் வகையில், அரசு அறிவித்த கடன் தள்ளுபடி திட்டம், 2016ன் படி, கூட்டுறவு நிறுவனங்களில் நிலுவையில் இருந்த, சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற்ற குறுகியகால பயிர்க்கடன்கள், நகையீட்டின் படி வழங்கப்பட்ட விவசாய கடன்கள், மத்திய கால கடனாக பெற்ற குறுகிய கால கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 28 ஆயிரத்து, 16 விவசாயிகளுக்கு, 139 கோடியே, 72 லட்சம் ரூபாய் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலக்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட ஜிட்டாண்டஹள்ளி மற்றும் ஜக்கசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில், டாப்செட்கோ திட்டத்தில் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், 598 பயனாளிகளுக்கு, 4.15 கோடி ரூபாய் பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X