ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, வனப்பகுதியில் இருந்து, சந்தன மர வேர்களை தோண்டி எடுத்த இருவரை கைது செய்த வனத்துறையினர், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர், தொழுவபெட்டா காப்புக்காட்டில் உள்ள காரக்கிணறு-பெல்லட்டி வனப்பாதையில் ரோந்து சென்றனர். அப்போது, வனப்பகுதியில் இருந்த சந்தனமர வேர்களை, மர்ம நபர்கள் இருவர் தோண்டி எடுத்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நல்லபரம்பட்டியை சேர்ந்த பெருமாள், 67, கிருஷ்ணகிரி மாவட்டம், போப்பனூரை சேர்ந்த மல்லப்பன், 65, என, தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த வனத்துறையினர், மூன்று கிலோ சந்தனமர வேர்கள் மற்றும் கடப்பாரை, கொடுவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஓசூர் மாவட்ட வன அலுவலர் பிரபு முன் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை வசூலிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE