திருவண்ணாமலை: சாத்தனூர் அணை நீர் மட்டம், 103.90 அடியாக உயர்ந்துள்ள நிலையில், வினாடிக்கு, 3,541 கன அடிநீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூரில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 7,321 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவுடன், 119 அடி உயரத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையை நம்பி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறச்சி மாவட்டத்தை சேர்ந்த, 50ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும், திருவண்ணாமலை நகர், 75க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம், நீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், அணைக்கு வினாடிக்கு, 3,541 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணை நீர் மட்டம், 103.90 அடியாக உயர்ந்து, 4,355 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவுடன் உள்ளது. அணை நீர் மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போதுமான அளவு, அணையில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE