பொது செய்தி

தமிழ்நாடு

'நாம் யாரை கை காட்டுகிறோமோ அவர்தான் முதல்வர்'

Added : ஜன 09, 2021
Share
Advertisement
கீழ்பென்னாத்தூர்: ''வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் நாம் யாரை கை காட்டுகிறோமோ அவர்தான் முதல்வர், அந்த அளவிற்கு, பா.ஜ. வளர்ந்துள்ளது,'' என, மாநில பொதுச் செயலாளர் ராகவன் பேசினார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, சட்டசபை தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. தெற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாநில பொதுச்

கீழ்பென்னாத்தூர்: ''வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் நாம் யாரை கை காட்டுகிறோமோ அவர்தான் முதல்வர், அந்த அளவிற்கு, பா.ஜ. வளர்ந்துள்ளது,'' என, மாநில பொதுச் செயலாளர் ராகவன் பேசினார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, சட்டசபை தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. தெற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராகவன், குத்துவிளக்கு ஏற்றி பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மூன்று சிறப்பான வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது. இதை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும். வரும், சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் நாம் யாரை கை காட்டுகிறோமோ, அவர்தான் முதல்வர். அந்த அளவிற்கு, பா.ஜ. சிறப்பாக வளர்ந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சி சிறப்பாக உள்ளதால், மக்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X