நாகப்பட்டினம்: நாகையில் பெண்ணை தாக்கி தூக்கிச் சென்று, கோவிலுக்குள் பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்தவர், 40 வயது பெண்; கணவரை இழந்தவர். இரண்டு பெண் குழந்தைகளுடன், நாகையில் வசித்தபடி, கட்டட கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். குழந்தைகளை, அருகே உள்ள நகரில் வசிக்கும் தங்கை வீட்டில் பாதுகாத்து வந்தவர், இரவு நேரங்களில் உறங்க, தன் வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், தன் வீட்டில் இருந்து, தங்கை வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள், அவரது வாயை பொத்தி, அப்பகுதியில் உள்ள சிறிய கோவிலுக்குள் தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து, தன்னை விட்டு விடும்படி, அப்பெண் கதறினார். ஆத்திரடைந்த இருவரும், அப்பெண்ணை கடுமையாக தாக்கி, அதிகாலை, 2:00 மணி வரை, பலாத்காரம் செய்துள்ளனர். 'இதை வெளியில் கூறினால், குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம்' எனவும் மிரட்டியுள்ளனர். அக்கா வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த தங்கை, பல இடங்களில் தேடினார். அதிகாலை வீட்டிற்கு வந்த அக்கா, நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெளிப்பாளையம் போலீசார் விசாரணையில், அருண்ராஜ், 24; ஆனந்த், 22 ஆகிய இருவரும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE