பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பனஹள்ளி அருகே கருஞ்சாந்து ஓவியங்கள்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், கொங்கணப்பள்ளி அருகே, 200 அடி நீளமுடைய ஒரு குகை போன்ற, பழங்கால மனிதனின் வாழ்விடத்தை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, காப்பாட்சியர் கூறியதாவது: தமிழகத்திலேயே, அதிக கருஞ்சாந்து ஓவியங்கள் இருக்கும் இடமாக இவை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், கொங்கணப்பள்ளி அருகே, 200 அடி நீளமுடைய ஒரு குகை போன்ற, பழங்கால மனிதனின் வாழ்விடத்தை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


இதுகுறித்து, காப்பாட்சியர் கூறியதாவது: தமிழகத்திலேயே, அதிக கருஞ்சாந்து ஓவியங்கள் இருக்கும் இடமாக இவை இருக்கலாம். விலங்கின் மீது மனிதன் அமர்ந்து செல்வது போல், ஐந்து ஓவியங்கள் உள்ளன. ஒரு அச்சை மையமாக கொண்டு வரையப்பட்டுள்ள சக்கரம், ஆரங்களோடு இரண்டு சுற்றுக்களை கொண்ட வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் கூறுகையில், ''தமிழகத்தில் கண்டறியப்பட்ட கருஞ்சாந்து ஓவியத்தில், பெரிய பாம்பின் உருவம் இதுவாகத்தான் இருக்கும். அதுபோலவே இப்பகுதியில் அதிக பாம்புகள் உள்ளன,'' என்றார். குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, விஜயகுமார், பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X