சேலம்: கோவை வடக்கு முதல், ராஜ்கோட் வரையான, வாராந்திர சரக்கு ரயில் சேவை நேற்று தொடங்கியது.
சேலம், ரயில்வே கோட்ட வர்த்தக மேம்பாட்டு பிரிவு சார்பில், சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை வடக்கு முதல், ராஜ்கோட் வரையான, வாராந்திர சரக்கு ரயில் சேவை, நேற்று தொடங்கியது. கோட்ட மேலாளர் ஸ்ரீனிவாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெள்ளிதோறும், இரவு, 8:00 மணிக்கு கோவை வடக்கு ரயில்வே ஸ்டேஷனில் புறப்பட்டு, வாஞ்சிபாளையம், ஆனங்கூர், சூரத், அகமதாபாத் வழியே, திங்கள் காலை, 5:00 மணிக்கு ராஜ்கோட்டை அடையும். மீண்டும் அங்கிருந்து, செவ்வாய் காலை, 8:00 மணிக்கு கிளம்பி, வியாழன் இரவு, 8:35க்கு கோவையை அடையும். அடுத்த ஆறு ஆண்டுக்கு, தனியார் ஏஜன்ஸி மூலம், இந்த ரயில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. இதேபோன்று, பிரத்யேக சரக்கு ரயில் சேவை, கோவை முதல், டில்லி, படேல் நகர் வரை இயக்கப்பட்டு வருகிறது. மேலும், திருப்பூர் முதல் கவுகாத்தி வரையான, பிரத்யேக சரக்கு ரயில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE