பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வின் கெங்கவல்லி எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா

Added : ஜன 09, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: கெங்கவல்லி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா உறுதியானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மருதமுத்து, 62. இவர், தலைவாசல், புளியங்குறிச்சியில் வசிக்கிறார். நேற்று முன்தினம், காமக்காபாளையத்தில், 'மினி கிளினிக்'கை திறந்து வைத்த இவர், கொரோனா பரிசோதனை செய்தார். நேற்று, கெங்கவல்லி

கெங்கவல்லி: கெங்கவல்லி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா உறுதியானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மருதமுத்து, 62. இவர், தலைவாசல், புளியங்குறிச்சியில் வசிக்கிறார். நேற்று முன்தினம், காமக்காபாளையத்தில், 'மினி கிளினிக்'கை திறந்து வைத்த இவர், கொரோனா பரிசோதனை செய்தார். நேற்று, கெங்கவல்லி அருகே, 95.பேளூரில், மினி கிளினிக் திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது, அவருக்கு கொரோனா இருப்பதாக தகவல் கிடைத்ததால், ஆத்தூரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, எம்.எல்.ஏ., மருதமுத்து கூறுகையில், ''கொரோனா பரிசோதனை செய்ததில், 7 சதவீதம் தொற்று உள்ளதாக, மருத்துவர்கள் கூறினர். இதனால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்,'' என்றார். அதே மருத்துவமனையில், கடந்த, 3 முதல், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்தூர் தொகுதி, எம்.எல்.ஏ., சின்னதம்பி, தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆத்தூர், கெங்கவல்லி தொகுதி, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனாவால், இன்று நடக்கும், அ.தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X