கரூர்: வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பொது மருத்துவம், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை, கண் சம்பந்தப்பட்ட பிரச்னை, ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக என, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளியணை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மேல்நிலை குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை துணை இயக்குனர் சந்தோஷ்குமார், பஞ்., தலைவர் சுப்ரமணி, டாக்டர்கள் பிச்சை முத்து, சாந்தி, ராஜசூர்யா மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE