நாமக்கல்: உலக நன்மை வேண்டி, நாமக்கல் அடுத்த அ.பாலப்பட்டி, விக்னேஷ் நகரில் அமைந்துள்ள நாகமுத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி, கருப்பனார் கோவிலில், நேற்று, திருவிளக்கு பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம். மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, 2:00 மணிக்கு சிறப்பு பூஜை, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, தமிழ் அறக்கட்டளை சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE