பொது செய்தி

தமிழ்நாடு

கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஓவிய, சிற்பக்கலை கண்காட்சி இன்று துவக்கம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழக அரசின், கலை பண்பாட்டுத்துறை ஓவிய சிற்பக்கலைகளை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்துறையின் கீழ், சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள, அரசு கவின் கலை கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் சிற்ப கல்லூரியும் இயங்கி வருகிறது. சிறந்த ஓவியம், சிற்ப கலைஞர்களுக்கு, கலைச்செம்மல் விருது வழங்குதல், மாநில அளவில் ஓவிய, சிற்பக்கலை கண்காட்சி நடத்துதல்,

நாமக்கல்: தமிழக அரசின், கலை பண்பாட்டுத்துறை ஓவிய சிற்பக்கலைகளை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்துறையின் கீழ், சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள, அரசு கவின் கலை கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் சிற்ப கல்லூரியும் இயங்கி வருகிறது. சிறந்த ஓவியம், சிற்ப கலைஞர்களுக்கு, கலைச்செம்மல் விருது வழங்குதல், மாநில அளவில் ஓவிய, சிற்பக்கலை கண்காட்சி நடத்துதல், தனி நபர், கூட்டு கண்காட்சி நடத்த நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகள், கலை பண்பாட்டுத்துறையின் மூலம் நடந்து வருகின்றன. சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய, கலை பண்பாட்டுத்துறையின் சேலம் மண்டலத்தில், நடப்பாண்டின் கண்காட்சி, நாமக்கல் மாவட்டத்தில் நடக்கிறது. நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள சுப்புலட்சுமி மஹாலில், இன்று (ஜன., 9) துவங்கி, இரண்டு நாட்கள், காலை, 10:00 முதல், இரவு, 7:00 மணி வரை நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தின், சிறந்த ஓவிய சிற்ப கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன. இக்கண்காட்சியை, கலெக்டர் முன்னிலையில், கலை பண்பாட்டு துறை ஆணையர் கலையரசி துவக்கி வைக்கிறார். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X