குமாரபாளையம்: குமாரபாளையத்தில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு, பொங்கல் போனஸ் வழங்குவது சம்பந்தமாக, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதுகுறித்து, உரிமையாளர் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது: முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள், 20 சதவீதம் கேட்டனர். ஜவுளி உற்பத்தி பாதிப்பு, நூல் விலை உயர்வு காரணமாக அதற்கு உடன்பாடில்லை என்றோம். இன்று (நேற்று), 8.33 சதவீதமாவது கொடுங்கள் என்று கேட்டனர். நாங்கள், 8 சதவீதம் கொடுப்பதாக கூறினோம். அதற்கும் உடன்படவில்லை. பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் அசோகன் கூறுகையில், '' பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொழிற்சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இது குறித்து அமைச்சர் தங்கமணியிடம் தகவல் தெரிவித்து, அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்துவது, 11ல், தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE