பொது செய்தி

தமிழ்நாடு

அரக்கோணம் - சேலம் ரயிலை கரூர் வரை இயக்க வலியுறுத்தல்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
நாமக்கல்: 'அரக்கோணம்-சேலம்' சிறப்பு ரயிலை, நாமக்கல் வழியாக, கரூர் வரை இயக்க வேண்டும்' என, நாமக்கல் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு, அரக்கோணம்-சேலம் இடையே, குறுகிய தூர விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரக்கோணத்தில் இருந்து, கடந்த, 6 முதல், திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில்,

நாமக்கல்: 'அரக்கோணம்-சேலம்' சிறப்பு ரயிலை, நாமக்கல் வழியாக, கரூர் வரை இயக்க வேண்டும்' என, நாமக்கல் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு, அரக்கோணம்-சேலம் இடையே, குறுகிய தூர விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரக்கோணத்தில் இருந்து, கடந்த, 6 முதல், திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில், அதிகாலை, 5:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06087), அதே நாளில், காலை, 10:50 மணிக்கு சேலம் செல்லும். மறுமார்க்கமாக, சேலத்தில் இருந்து, மாலை, 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06088), அதேநாளில், இரவு, 9:10 மணிக்கு அரக்கோணம் செல்லும். அரக்கோணம்-சேலம் சிறப்பு ரயிலை, நாமக்கல் வழியாக, கரூர் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடையில், ராசிபுரம், நாமக்கல், மோகனூரில் நின்று செல்ல வேண்டும். அவ்வாறு இயக்கினால், கரூர், நாமக்கல் மாவட்ட மக்களின் நெடுநாள் கனவான, சென்னை செல்ல, பகல் நேர ரயில் வசதி கிடைக்கும். மேலும், ராமேஸ்வரம்-திருச்சி வரை இயக்கப்படும் விரைவு ரயிலை, கரூர், நாமக்கல் வழியாக, சேலம் வரை இன்டர்சிட்டி ரயிலாக இயக்கினால், சேலம், நாமக்கல்லில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளுக்கு நேரடியாக செல்லலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X