அமெரிக்காவில் பைடன் பதவியேற்பு வரை வன்முறை? அதிபர் டிரம்ப் 'வீடியோ' கசிந்ததால் பரபரப்பு

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்காவில், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் கட்டடத்தின் மீது தாக்குதல்நடத்தப்பட்ட நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் வரை, வன்முறையை தொடரும்படி டிரம்ப் பேசியதாக கூறப்படும், 'வீடியோ' வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, பைடன், பதவியேற்பு,  வன்முறை, அதிபர் டிரம்ப், வீடியோ,பரபரப்பு, நிலைமை,மக்கள் பீதி

வாஷிங்டன்:அமெரிக்காவில், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் கட்டடத்தின் மீது தாக்குதல்நடத்தப்பட்ட நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் வரை, வன்முறையை தொடரும்படி டிரம்ப் பேசியதாக கூறப்படும், 'வீடியோ' வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து,'நிலைமை விபரீதமாகுமோ' என, மக்கள் பீதியில் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று, வரும், 20ல் பதவியேற்க உள்ளார்.தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, பார்லி.,யின் கூட்டுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது, அதிபர் டிரம்பின் ஆதர வாளர்கள், பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து, வன்முறையில் ஈடுபட்டனர்.


ஐந்து பேர் பலி

பார்லிமென்ட் வளாகம் உள்ளிட்டவை அமைந்துள்ள கேப்பிடோல்ஹில் பகுதியிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; பலர்காயமடைந்தனர்.தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து, பல்வேறு வழக்குகள் தொடர்ந்த டிரம்ப், தன் ஆதரவாளர்களை வன்முறையில் ஈடுபடுத்தியதற்கு, உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வேறு வழியில்லாமல், நிர்வாக மாற்றத்துக்கு ஒத்துழைப்பதாக, டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக, பார்லி.,யில் ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன், சமூக வலைதளங்களில் வெளியிட்ட செய்தி யில், 'அனைவரும் கேப்பி டோல் செல்லுங்கள்; கடுமையாக போராடுங்கள்' என, டிரம்ப் கூறியிருந்தார். தன் ஆதரவாளர்களை வன்முறைக்கு துாண்டி விட்டதாக, டிரம்ப் மீது குற்றஞ் சாட்டப்பட்டது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப்; அவரது மகள், இவாங்கா; மகன், டான் ஜூனியர் ஆகியோர் தோன்றும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை, டான் ஜூனியர், தன் மொபைல் போனில் படம் பிடித்து உள்ளார். 'டிவி' திரைகளில், டிரம்ப் ஆதரவாளர்கள், கேப்பிடோல் கட்டடத்தை நோக்கிச் செல்கின்றனர். அப்போது, டிரம்ப், இவாங்கா உள்ளிட்டோர், ஒரு, 'பாப்' பாடலுக்கு நடனம் ஆடி, கொண்டாடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


அடங்க மாட்டார்

மேலும், 'நாட்டில் நடக்கும் மோசமான நிகழ்வுகளை, நம் தேசபக்தர்கள் ஏற்க மாட்டார்கள்' என, டான் ஜூனியர் கூறுவதும், அதில் பதிவாகி உள்ளது.

இது குறித்து, பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளதாவது: டிரம்ப், தன் ஆதரவாளர்களை துாண்டி விட்டு, வன்முறையில் ஈடுபட வைத்துள்ளார். வன்முறை நடக்கும் நேரத்தில், தன் குடும்பத்தாருடன் அவர், பாட்டு பாடி, நடனமாடிக் கொண்டிருக்கிறார். தோல்வியை ஒப்புக் கொள்ள டிரம்ப் மறுத்து வருகிறார். வேறு வழியில்லாமல், நிர்வாக மாற்றத்துக்கு ஒப்புக் கொண்டு உள்ளார். ஆனால், அவர் ஒரு அடிபட்ட புலி. இதுவரை வெளியிட்டுள்ள செய்திகள், வீடியோக்களை பார்க்கும்போது, டிரம்ப் அடங்க மாட்டார் என தெரிகிறது. ஜோ பைடன் பதவியேற்கும் வரை, அமெரிக்காவில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மக்களும், நிலைமை விபரீதமாகுமோ என்ற அச்சத்தில் தான் உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வன்முறையை துாண்டும் வகையில் செய்தி வெளியிட்டதால், அதிபர் டொனால்டு டிரம்பின் கணக்கை, 'டுவிட்டர்' சமூக வலைதளம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், வன்முறை தொடரும் வகையில், செய்திகள் வெளியிட வாய்ப்பு இருப்பதால், அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கி வைப்பதாக, டுவிட்டர் தெரிவித்துள்ளது.

'வரும், 20ம் தேதி, ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க மாட்டேன்' என, டுவிட்டரில் டிரம்ப் பதிவிட்டிருந்தார். 'கடந்த சில நாட்களாக டிரம்ப் வெளியிட்டு வரும் செய்திகளை பார்க்கும்போது, வன்முறையைத் துாண்டும் வகையில், அவர் தொடர்ந்து செய்தி வெளியிடும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சுகிறோம். அதனால், அவரது கணக்கை முடக்கி வைக்கிறோம்' என, டுவிட்டர் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், ''இது எதிர்பார்த்தது தான். எங்களை அமைதிப்படுத்த முடியாது. தேவைப்பட்டால், என் ஆதரவாளர்களுக்காக, புதிய சமூக வலைதளத்தை கூட உருவாக்குவோம்,'' என, தெரிவித்துள்ளார்.


'வெளிச்சத்துக்கு வந்த உண்மை'


அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள, ஜோ பைடன் கூறியுள்ளதாவது: கேப்பிடோல் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்திய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். குடியரசு கட்சியைச் சேர்ந்த, எம்.பி., டெட் குரூஸ் உள்ளிட்டோரை, இனி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவர்களுடைய உண்மையான முகம் மக்களுக்கு தெரிய வந்து உள்ளது.

இந்த போராட்டத்துக்கு டிரம்ப் மற்றும் டெட் குரூஸ் போன்றவர்கள் காரணம் என்பதை, அவர்களது கட்சியினரே ஒப்புக் கொண்டுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், சில போலீசார், 'செல்பி' எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்கள் மீதும்நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


பதவி நீக்க தீர்மானம்!

அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர், நான்சி பலோசி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க பார்லிமென்ட் கட்டடம் மீது, அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதல் நடத்த துாண்டியதற்காக, டிரம்ப் தன் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவர் மீது பதவி நீக்க தீர்மானம் பார்லி.,யில் தாக்கல்செய்யப்படும்.அரசியல் சாசனத்தின், 25வது பிரிவின்படி, டிரம்பை பதவியில் இருந்து நீக்குவதற்கு, சில உறுப்பினர்கள் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.அதைப் பயன்படுத்தி, அவரை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-ஜன-202111:24:40 IST Report Abuse
Malick Raja ஒரு மிகப்பெரிய பதவி வெறி தீவிரவாதி அமெரிக்காவை ஆட்கொண்டது நிருபிக்கப்பட்டுள்ளது.. சொல் செயல் அனைத்திலும் பதவியின் தீவிரவாதம்.. ஆக ஜோ பைடன் பதவியேற்றவுடன் ட்ரெம்ப்ப பிடித்து ..சோ சொன்னது போல் முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டு உரிய தண்டனை கொடுப்பது உறுதி
Rate this:
Cancel
10-ஜன-202114:07:22 IST Report Abuse
kulandhai Kannan நீ கலக்கு தல. இனிமே எவனாவது அமெரிக்காவை பார், ஆட்டுக்குட்டியை பார் என்று சொல்வானா??
Rate this:
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
10-ஜன-202109:32:15 IST Report Abuse
Nallappan Kannan Nallappan கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா அதை விட பண்ணிமடை தான் ரொம்ப அவமானப்பட்டு துடிக்குது முதலில் ஊரு பேரை மாத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X