சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

இப்பத்தான் நடிக்க கத்துக்கறேன்!

Updated : ஜன 10, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திரையுலகிற்கு வந்து, 10 ஆண்டுகள் ஆகியுள்ளது பற்றி, பிரபல நடிகர் விஜய்சேதுபதி: கடந்த, 2009, டிச., 24. குறும்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போ, 'அப்பாவுக்கு உடம்பு முடியலை. 'உடல் சில்லுன்னு ஆகிடுச்சு'ன்னு அம்மாகிட்ட இருந்து போன். எனக்கு அன்னைக்கு நிலை கொள்ளலை. மறுநாள் அப்பா இறந்துட்டதா, டாக்டர் உறுதிப்படுத்திட்டார். என்னோட முதல் படம், அதே டிசம்பர் 24, அடுத்த வருஷம்
சொல்கிறார்கள்

திரையுலகிற்கு வந்து, 10 ஆண்டுகள் ஆகியுள்ளது பற்றி, பிரபல நடிகர் விஜய்சேதுபதி: கடந்த, 2009, டிச., 24. குறும்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போ, 'அப்பாவுக்கு உடம்பு முடியலை. 'உடல் சில்லுன்னு ஆகிடுச்சு'ன்னு அம்மாகிட்ட இருந்து போன். எனக்கு அன்னைக்கு நிலை கொள்ளலை. மறுநாள் அப்பா இறந்துட்டதா, டாக்டர் உறுதிப்படுத்திட்டார். என்னோட முதல் படம், அதே டிசம்பர் 24, அடுத்த வருஷம் வெளியானது. 10 ஆண்டுகள் ஆனாலும், இப்போ தான் சினிமாவைக் கத்துக்கிட்டிருக்கேன். அதனால, பத்து வருஷம்கிறதை பெரிசாப் பார்க்கலை; கொண்டாடவும் விரும்பலை.

இப்போ தான் கதாபாத்திரமெல்லாம் புரிய ஆரம்பிக்குது; அறிவு வந்திருக்கு. இன்னும் ஆழமா வேலை பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். என் ரசிகர்களும் இந்தப் பத்தாம் ஆண்டை கொண்டாடணும்னு சொன்னாங்க.'வேண்டாம்டா, இதைக் கொண்டாடிட்டா மனசு திருப்தி அடைஞ்சிரும். நான் திருப்தி அடைய விரும்பலை'ன்னு சொல்லிட்டேன். சும்மா, 'டயலாக்ஸ்' பேசிச் சிரிச்சா நடிப்புன்னு சில பேர் நினைக்கிறாங்க; ஆத்மார்த்தமா மனிதர்களைத் தொடுறது தான் நடிப்பு. அதைத்தான் பழகிக்கிட்டிருக்கேன்.
இந்த தேர்தலை மிக முக்கியமான தேர்தலாகப் பார்க்குறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, மக்கள் மனசுல இடம் பிடிக்குறதுக்கு, நிறைய பேர் நிறைய வேலைகள் செஞ்சிருக்காங்க. அவங்கவங்களுக்கு ஒரு, 'ஐ.டி., விங்' வெச்சிக்கிட்டு, சமூக வலைதளங்களில் செய்தியைப் பரப்புறதையே தொழிலா வெச்சிக்கிட்டு இருக்காங்க.'என்ன வேணும்னாலும் சொல்லி மக்களை மயக்க முடியும், எதை வேணும்னாலும் நம்ப வைக்க முடியும்'னு நிறைய முயற்சிகள் எடுத்திருக்காங்க. அந்த முயற்சிகளின் பலன் என்னன்னு இந்தத் தேர்தல் தான் சொல்லும்னு நம்புறேன்.

கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தப்போ மக்கள் இவ்வளவு துாரம் அரசியலைக் கூர்ந்து கவனிக்கலைன்னு நினைக்கிறேன். ஏன்னா, 'அவங்க எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க' அப்படிங்கிற நம்பிக்கை இருந்தது. ஆனா, இந்த அஞ்சு வருஷத்தில் மக்கள் எல்லாத்தையும் ரொம்ப கூர்ந்து கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

தேர்தலில் மக்களுடைய மனநிலை என்னன்னு தெரிஞ்சிக்குற ஆர்வத்துல இருக்கேன். நானும் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்குறேன்.ரஜினி சார்க்கு நன்றி சொல்ல விரும்புறேன். வருவாரா, வர மாட்டாரான்னு ரொம்ப நாளா இருந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வெச்சதுக்கு நன்றி. மத்தபடி அரசியலுக்கு வருவதும், வராததும் அவரின் தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றிக் கருத்து சொல்ல, எனக்கு எந்த உரிமையும் இல்ல!


4 இட்லிகளை 10 ரூபாய்க்கு கொடுக்கிறேன்!


சேலத்தில், ஏழை, எளியவர்கள் வசிக்கும் பகுதியில், நான்கு இட்லி, 10 ரூபாய்க்கு வழங்கி வருவது பற்றி மகேஷ்: எங்கள் முன்னோர், தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னரின் வம்சாவளியினர். 300 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்தவர்களின் வழித்தோன்றல்கள் நாங்கள். சுதந்திரப் போராட்டங்களிலும் அவர்களின் பங்கு இருந்தது.

என் அம்மா வழித் தாத்தா ஸ்ரீனிவாசமூர்த்தி ராவ், சைமன் கமிஷனின் போது ஆங்கிலேய அதிகாரியை, வண்டியிலிருந்து கீழே தள்ளி, தன் எதிர்ப்பைக் காண்பித்தவர். அவரின் கண்கள் பறிக்கப்பட்டு, பல சித்ரவதைகளை சிறையில் அனுபவித்தவர். அப்பா ஸ்ரீதரனும் சேவைகளில் சளைத்தவரில்லை. அரசுக் கல்லுாரியின் முதல்வராக இருந்த அவர், ரத்த தானம் ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற எண்ணற்ற சேவைகளை செய்துள்ளார்.

நான், என் மனைவி பத்மஸ்ரீ, மகள் கோபிகா, மகன் கிருஷ்ண கேசவ் தாஸ் ஆகியோர், 'இஸ்கான்' எனப்படும், கிருஷ்ண பக்த அமைப்பில் ஈடுபாடு உடையவர்கள். கொரோனா ஊரடங்கில், நிறைய பேர் உண்ண உணவின்றித் தவித்தனர். எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பசி வந்து விட்டால் கடவுளே ஆனாலும் பொறுக்க முடியாது. அந்த நேரத்தில், 7,000 பேருக்கு உணவு தந்தோம்.அப்போது, எனக்குள் விழுந்தது .

இந்த சேவைக்கான ஆரம்பப் புள்ளி. இந்த, 'லாக் டவுன்' சமயத்தில் வருமானமின்றி தவிப்பவர்களுக்காக, மலிவு விலையில் காலை உணவைத் தந்தால் என்ன என்று சிந்தித்தேன். ஏற்கனவே என் தந்தை, பி.எஸ்.ஸ்ரீதரன் அறக்கட்டளை மூலம் சேவைகள் செய்வதால் பெற்ற அனுபவங்கள் கை கொடுத்தன. நான் நேசிக்கும் 'ஹீரோ', என் 'ரோல்மாடல்', பிரதமர் மோடி என்பதால், அவரின் பெயரையே வைத்தேன்.

கிட்டத்தட்ட, நான்கு மாதங்களாக, 'பிளான்' செய்து, அதற்கான உபகரணங்களுடன், இந்த இடத்தில் சமையல் கூடத்தை உருவாக்கினோம்.மலிவு விலையில், 10 ரூபாய்க்கு நான்கு இட்லிகள், சாம்பாருடன் தர முடிவு செய்து, இப்போது வரை வழங்கி வருகிறேன். என் தந்தைக்கு சொந்தமான நிலம் ஒன்று என்னிடம் இப்போது தான் வந்தது.

அதை விற்றுக் கிடைத்த பணத்தைத் தான், இந்த சேவைக்கான முதலீடாக போட்டிருக்கிறேன். நாம் எவ்வளவு சொத்து சம்பாதித்தாலும், போகும்போது எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. அப்படியிருக்க, நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாமே என்று தான் இதை செய்கிறேன்.இப்போது சேலத்தின் முக்கியமான, 12 இடங்களில் மோடி இட்லிகள் கிடைக்க வழி செய்துள்ளோம்.விரைவில் மோடி தோசை, சப்பாத்திகளை யும் தர இருக்கிறோம். எங்கள் அறக்கட்டளை மூலம், எங்களால் முடிந்த பட்ஜெட்டில், காலை உணவுகளை வழங்கி வருவதால், மேலும் பலருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்!

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
10-ஜன-202119:48:00 IST Report Abuse
Madhusoodhana Ramachandran நல்ல தொண்டு / சேவை. உள்ளதால் நினைத்தாலும் அந்த மாதிரி எல்லோராலும் சேவை செய்ய இயலவில்லை. நல்ல உள்ளம் கொண்ட உங்கள் சேவை தொடரட்டும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
10-ஜன-202110:54:35 IST Report Abuse
vbs manian சிவாஜியை போன்று நல்ல நடிகராக வாருங்கள். அரசியல் சாக்கடையில் குதிக்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X