சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை: கோர்ட் எதிரே 2 வாலிபர்களுக்கு வெட்டு,ஒருவர் பலி

Added : ஜன 09, 2021
Share
Advertisement
மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கோர்ட் எதிரே 2 வாலிபர்களை மர்ம நபர்கள் வெட்டியதில் ஒருவர் பலியானார்,மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வெட்டிய மர்ம நபர்கள் தப்பி ஓடினர். மானாமதுரை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மைனர் மணி (எ)அருள்நாதன் 27, மானாமதுரை உடைகுளம் பகுதியைச் சேர்ந்த கருப்புச்சாமி மகன் வினோத் கண்ணன் 28, நண்பர்களான இவர்கள் 2 பேர் மீது ஏற்கெனவே பல

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கோர்ட் எதிரே 2 வாலிபர்களை மர்ம நபர்கள் வெட்டியதில் ஒருவர் பலியானார்,மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வெட்டிய மர்ம நபர்கள் தப்பி ஓடினர். மானாமதுரை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மைனர் மணி (எ)அருள்நாதன் 27, மானாமதுரை உடைகுளம் பகுதியைச் சேர்ந்த கருப்புச்சாமி மகன் வினோத் கண்ணன் 28, நண்பர்களான இவர்கள் 2 பேர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ள நிலையில் நேற்று இரவு 8.00 மணிக்கு சிவகங்கை ரோட்டில் உள்ள கோர்ட் எதிரே உள்ள ஒரு
கடையில் உட்கார்ந்திருந்த போது டூவிலர்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் 2 பேரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர், இதில் மைனர் மணி (எ)அருள்நாதன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.பலத்த காயமடைந்த வினோத்கண்ணனை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
கோர்ட் எதிரே மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் 2 பேரை வெட்டிய சம்பவம் மானாமதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறி தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருவதாக கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X