மேற்கு வங்கத்தில் அதிரடி: ஜே.பி.நட்டா அறிவிப்பு

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 09, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
கட்வா:''மேற்கு வங்கத்தில், பா.ஜ., ஆட்சி அமைந்ததும், மத்திய அரசின், 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.ஆறு மடங்குஇந்நிலையில், பா.ஜ., தேசிய
 மேற்கு வங்கம், பாஜ, பா.ஜ., பாஜ தலைவர் நட்டா,  ஜே.பி.நட்டா

கட்வா:''மேற்கு வங்கத்தில், பா.ஜ., ஆட்சி அமைந்ததும், மத்திய அரசின், 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.


ஆறு மடங்கு

இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மேற்கு வங்கத்துக்கு நேற்று வந்தார்.


புர்த்வான் மாவட்டத்தில், 'விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:மத்தியில் இதற்கு முன் இருந்த அரசுகளைவிட, மோடி அரசு, விவசாயிகள் நலனில் பெரும் அக்கறை வைத்து செயல்படுகிறது.பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை, மோடி அரசு, ஆறு மடங்கு அதிகரித்து உள்ளது. பிரதமரின் விவசாயிகள் நல நிதி திட்டத்தை, மேற்கு வங்கத்தில் அமல்படுத்த, முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்தார். விவசாயிகள் ஆதரவு கைவிட்டு போனதையறிந்து, தற்போது அந்த திட்டத்தை அமல்படுத்தக் கோரி, பிரதமருக்கு மம்தா கடிதம் எழுதியுள்ளார்.'

ஆயுஷ்மான் பாரத்'மாநிலத்தில், பா.ஜ., ஆட்சி அமைவது உறுதி. அதன்பின், விவசாயிகளுக் கான மத்திய அரசின் நல திட்டங்கள், மாநிலத்தில் முழுமையாக அமல்படுத்தப்படும். ஏழை மக்களுக்கு தரமான, பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை கிடைக்க, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டமும் அமல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-ஜன-202113:59:55 IST Report Abuse
Malick Raja ஆமா .. ஆமா ..ஆட்சி அமையட்டும் .. எல்லாம் நடக்கட்டும் .. இறுதி ஊர்வலமும் நடக்கட்டும்
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
10-ஜன-202122:09:53 IST Report Abuse
PANDA PANDI SO SAD. HOW WB PEOPLE GOING TO MANAGE THIS KIND OF jimiks... Alert BANNER KUPPAN.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
10-ஜன-202117:01:29 IST Report Abuse
sankaseshan கும்பு டாத சாமிக்கு BJP ஐ திட்டுவது என்றால் பரமகுஷி காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் BJP ஆட்சி வரும் கும்பிடாத சாமி அழுதுகொண்டே சிரிப்பார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X