''வலிப்பு நோயை நிரந்தரமாக குணப்படுத்த மருந்துகள் வந்து விட்டன,'' என்று நம்பிக்கை அளிக்கிறார் நரம்பியல் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கவுசிக்.வலிப்பு நோய் எதனால் ஏற்படுகிறது; இதற்கு மருந்து உள்ளதா?வலிப்பு நோய்க்கு மூளை நரம்புகளில் ஏற்படும், 'ஷார்ட் சர்கியூட்' தான் காரணம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, யாருக்கும் வரலாம். இது வந்தால் குணமாகாது என்ற தவறான எண்ணம் உள்ளது. பல பேர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இதை முழுமையாக குணப்படுத்தும் மருத்துவ முறைகளும், மருந்துகளும் வந்து விட்டன. இந்த நோய் உள்ளவர்கள் கவலைப்பட தேவையில்லை. குறிப்பாக, குழந்தைகளுக்கு இருந்தால், உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலியால் பலர் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு என்ன காரணம்?தலைவலிக்கு நிறைய காரணங்கள் உள்ளன. இப்போது இளம் வயதினர் பலர் பாதிக்கப்படுகின்றனர். கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவது ஒரு காரணம். துாக்கமின்மை, மன அழுத்தம், அதிக உணர்ச்சிவசப்படுவது போன்ற காரணங்களாலும் வருகிறது. மேற்கண்ட காரணங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும், அளவாக பயன்படுத்துவது, போதிய ஓய்வு எடுத்துக்கொள்வது மூலம் தவிர்க்கலாம்.வயதானவர்களுக்கும் இந்த பிரச்னை இருக்கிறதே?வயதானவர்களுக்கு வரும் தலைவலிக்கான காரணங்கள் வேறுபடுகின்றன. சிலருக்கு சாப்பிடும் உணவே பிரச்னையாக இருக்கும். அதிக கொழுப்பு உள்ள உணவு சாப்பிட்டாலும், அதிகளவில் சாப்பிட்டாலும் வரும். உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் போதும் வரும். இப்பிரச்னை உள்ளவர்கள், முறையாக மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தவறினால், பக்கவாதம் வரவும் வாய்ப்பு உள்ளது.பக்கவாதத்துக்கான அறிகுறிகள் என்ன?நிற்கும்போது பேலன்ஸ் தவறுவது, ஒரு பக்கம் முகம் கோணலாவது, ஒரு பகுதி கை, கால்கள் அசைக்க முடியாமல் மரத்து போவது, பாதியாக பார்வை குறைவது,இந்த நான்கில் எது இருந்தாலும் அவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள். உடனே நரம்பு சம்பந்தப்பட்ட டாக்டரை பார்க்க வேண்டும்.என்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?தீராத தலைவலி தொடர்ந்து இருக்கிறது என்றால், மூளை நரம்புகளில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். அதனால் சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்க்கலாம். தலைவலிக்காக டாக்டர் பரிந்துரையின்றி, வலி மாத்திரை சாப்பிடக்கூடாது.
அது கிட்னியை பாதிக்கும். வெர்டிகோ நோயும் இது சார்ந்த பிரச்னையா?உடலில் பலம் குறைவது, மூளை, நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு காரணம். காலில் உணர்வுகள் குறைவாக இருந்தாலும், இந்த பிரச்னை வரும். பொதுவாக 30 - 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குளிர்காலத்தில் இப்பிரச்னை வரும். வயதானவர்களுக்கும், காது கேட்காதவர்களுக்கும் வரும் வாய்ப்பு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE