பொது செய்தி

தமிழ்நாடு

புத்தாண்டில் மீள்வோம்... நம்பிக்கைதானே எல்லாம்!

Added : ஜன 09, 2021
Share
Advertisement
கோவை, ஜன. 10-இருபத்து ஒன்றாம் நுாற்றாண்டில், 2020ம் ஆண்டை மட்டும் உலக மக்களால், எளிதில் மறந்து விட முடியாது. மிகப்பெரிய உயிர் பயத்தையும், பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்திய ஆண்டாக, உலக வரலாற்றில் பதிந்துள்ளது. நம், கனவுகளையும், நம்பிக்கையையும் தகர்த்த அந்த பேரழிவு காலத்தையும் கடந்து, மீண்டெழுந்து வந்திருக்கிறோம் என்பதுதான், 2021ம் ஆண்டு நமக்கு அளித்து இருக்கும்
 புத்தாண்டில் மீள்வோம்... நம்பிக்கைதானே எல்லாம்!

கோவை, ஜன. 10-இருபத்து ஒன்றாம் நுாற்றாண்டில், 2020ம் ஆண்டை மட்டும் உலக மக்களால், எளிதில் மறந்து விட முடியாது. மிகப்பெரிய உயிர் பயத்தையும், பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்திய ஆண்டாக, உலக வரலாற்றில் பதிந்துள்ளது. நம், கனவுகளையும், நம்பிக்கையையும் தகர்த்த அந்த பேரழிவு காலத்தையும் கடந்து, மீண்டெழுந்து வந்திருக்கிறோம் என்பதுதான், 2021ம் ஆண்டு நமக்கு அளித்து இருக்கும் நற்செய்தி.பத்து நாட்கள் கடந்து விட்ட நிலையில், நம்ம ஊர் பிரபலங்கள் சிலர், கடந்த ஆண்டை எப்படி உணர்ந்தார்கள், இந்த புத்தாண்டை எப்படி பார்க்கிறார்கள் என கேட்டோம்...!கடந்தாண்டு ஏழை, பணக்காரர், தொழிலாளர், தொழிலதிபர் என, எவரும் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர். இந்த இழப்புகளை எல்லாம் சவாலாக ஏற்றுக்கொண்டு, நாம் கடந்து வந்திருக்கிறோம் இந்த 2021ம் ஆண்டை புது நம்பிக்கையுடன் நாம் எதிர் கொள்ள வேண்டும். நிச்சயமாக இந்த ஆண்டு மக்களுக்கு சிறப்பாக அமையும்.-ராஜாமணி, கலெக்டர் கோவை.கொரோனாவால் தொழில்துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு, 2020 ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர சிறிது காலம் பிடிக்கும். இந்த சூழ்நிலையில், மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், 2021ம் ஆண்டை பொறுத்தவரை தொழில்த்துறையினருக்கு சவாலான ஆண்டாக இருக்கும். இந்த சரிவில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது.-கார்த்திக், தலைவர், சீமாபொதுவாக ஒரு நோய் மக்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தும். ஆனால், கொரோனா மட்டும்தான் டாக்டர்களிடமும் உயிர் பயத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, அரசு மருத்துவமனை டாக்டர்கள் பட்ட துயரம் கொஞ்சமல்ல. கொரோனா பணி முடித்ததும், மனைவி, மக்களை பார்க்க முடியாமல், தனிமைப்படுத்தப்படுவது பெரிய கொடுமை. அந்த வலி ஏற்படுத்தும் பின் விளைவுகள் மோசமானதாக இருக்கும். 2021ம் ஆண்டில் இவை எல்லாம் மாறவேண்டும்.-டாக்டர் மோனி, மனநல மருத்துவ நிபுணர்.கடந்த ஆண்டின் பாதிப்பு, இயற்கையாக ஏற்பட்டதுதான். 2021ம் ஆண்டில் இவை அத்தனையில் இருந்தும், மீண்டு விடும் வாய்ப்பு உள்ளது. காரணம் எல்லா துறைகளிலும் சுழற்சி வேகம் அதிகரிக்கும். தேவையும் அதிகரிக்கும். கடந்த ஆண்டு இழந்ததை, இன்னும் ஆறு மாதங்களில் மீட்டெடுத்து விடலாம். அதனால், 2021ம் ஆண்டை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.-கவிஞர் கவிதாசன், இயக்குனர்ரூட்ஸ் மனிதவள மேம்பாட்டுத்துறை மனிதர்களின் வேகத்தையும், அவசரத்தையும் கட்டுப்படுத்தி, நிதானப்படுத்தி இருக்கிறது 2020ம் ஆண்டு. கொரோனா பரவல் வரவில்லை என்றால் வாழ்க்கையை யாரும் திரும்பி பார்த்திருக்க மாட்டோம். இயற்கையை மறந்து, மனிதன் திருப்பி பார்க்காமல் ஓடிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் என்பதைதான், கடந்த ஆண்டு நமக்கு உணர்த்தி இருக்கிறது. இதில் கற்றுக்கொண்ட பாடம், நம் எதிர் காலத்தை சரி செய்து கொள்ள உதவும்.-வனிதா மோகன், சிறுதுளி நிர்வாக அறங்காவலர்.கடந்த ஆண்டு கொரோனா பரவல் காலம். வேளாண் துறைக்கு அதிகம் பாதிப்பு இல்லை. தானிய உற்பத்தி குறையவில்லை. அதனால் உணவு பற்றாக்குறை வராது. ஆனால் வேளாண் மாணவர்களின் கல்விதான், ஆறு மாதங்கள் முடங்கி விட்டது. மற்றபடி, 2021ம் ஆண்டு நன்றாக இருக்கும். நம்பிக்கைதான் வாழ்க்கை. மாணவர்கள் மனம் தளர்ந்து விட கூடாது.-குமார், துணைவேந்தர்,தமிழ்நாடு வேளாண் பல்கலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X