தமிழ்நாடு சவர தொழிலாளர்கள் சங்கத்திற்கான, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல், மாநில தலைவர் முனுசாமி தலைமையில் நடந்தது. இதில், கோவை வடக்கு மாவட்ட தலைவராக ஆறுச்சாமி, மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட பொருளாளர் குணசேகரன், அமைப்பு செயலாளர் நேரு மற்றும் நிர்வாகிகள் பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சவர தொழிலாளர் சமுதாயத்திற்கு, 5 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ஏற்றுமதி இறக்குமதி பயிற்சிதமிழ்நாடு வேளாண் பல்கலையில், வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த ஐந்து நாள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். உழவர்கள், பெண்கள், இறுதியாண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள் இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கத்தில், ஜன.,18 முதல் 22 வரை வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு, busieness@tnau.ac.in eximabdtnau@gmail.com மற்றும் 0422-6611310, 9500476626 ஆகிய எண்களில் அழைக்கலாம்.மாநில ஆணழகன் போட்டிகோவை, கே.பி.ஆர்., கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில், முதலாம் ஆண்டு 'கே.பி.ஆர்., கிளாசிக் 2021' என்ற பெயரில், மாநில ஆணழகன் போட்டி, வரும், 30ம் தேதியன்று கல்லுாரி வளாகத்தில் நடத்தப்படுகிறது.
வீரர்களுக்கான பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடக்கவுள்ளன. விவரங்கள் அறிய, 97867 67157 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.கழிப்பறை கட்டணம் எவ்வளவுகாந்திபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, 'துாய்மை பாரதம்' திட்டத்தில், நவீன கழிப்பறை கட்டப்பட்டுளள்ளது. இவற்றை பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சி உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் ஆய்வு செய்து, நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வாங்க வேண்டுமென, ஊழியர்களை எச்சரித்தார். கழிப்பறை சுவற்றில் சிறுநீர், மலம் கழிக்க ரூ.1, குளிக்க ரூ.3 என, அறிவிப்பு, பெயின்டால் எழுதப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE