கோவை:'பாயன்ட் மீடியா' நிறுவனம் சார்பில், 'இன்டீரியோ' மற்றும் 'எக்ஸ்டீரியோ' 2021 கண்காட்சி, அவிநாசி ரோடு தி கிராண்ட் ரீஜென்ட் ஓட்டலில் நேற்று துவங்கியது.'கொசினா' உறுப்பினர் பிரபாகரன், கண்காட்சியை நேற்று 'ரிப்பன்' வெட்டி துவக்கிவைத்தார். கொசினா உறுப்பினர்கள் ஜெகன், ரவிக்குமார், 'பாயன்ட் மீடியா' நிறுவனர் சுந்தரமூர்த்தி, கண்காட்சி தலைவர் ஹேமா உட்பட பலர் பங்கேற்றனர்.'பாயன்ட் மீடியா' நிறுவனம் சார்பில் நடக்கும் இந்த வீடு, கட்டுமான பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்களுக்கான கண்காட்சி, காலை, 10:30 முதல் இரவு, 7:30 மணி வரை நடக்கிறது. கட்டுமான நிறுவனத்தினர், வீட்டு அலங்கார பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனையாளர்கள் என பல்வேறு நிறுவனங்களின், 32 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன;கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது. அனுமதி இலவசம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE