மின் ஒயரை கடித்தவர் பலி

Added : ஜன 09, 2021
Share
Advertisement
மதுக்கரை: மதுக்கரை மலைசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயன், 36; கூலி தொழிலாளி. திருமணமாகி, மனைவி ஒரு குழந்தை உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டில் மின் வினியோகம் தடைபட்டது. இதனை சரி செய்ய மின் இணைப்பிலுள்ள ஒயரை, விஜயன் பல்லால் கடித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார். அருகிலிருந்தோர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதித்த

மதுக்கரை: மதுக்கரை மலைசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயன், 36; கூலி தொழிலாளி. திருமணமாகி, மனைவி ஒரு குழந்தை உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டில் மின் வினியோகம் தடைபட்டது. இதனை சரி செய்ய மின் இணைப்பிலுள்ள ஒயரை, விஜயன் பல்லால் கடித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார். அருகிலிருந்தோர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பீர்பாட்டிலால் குத்து; ஒருவர் கைதுகோவை: கரூரை சேர்ந்தவர் ரகுபதி, 29. போத்தனுார் ஆட்டுத்தொட்டியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக உள்ளார். நேற்று முன்தினம் பாருக்கு சாரதா மில் ரோட்டை சேர்ந்த முகமது அன்சாரி, 34, நிசாம், வின்சென்ட், செல்வம் ஆகிய நால்வரும் சென்றனர். மது அருந்திய பின் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை ரகுபதி கண்டித்தார். ஆத்திரமடைந்த முகமது அன்சாரி, பீர்பாட்டிலால் ரகுபதியை குத்தினார். ரகுபதி போத்தனுார் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், முகமது அன்சாரியை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.வாகனம் மோதி வாலிபர் பலிகோவை: ராமகிருஷ்ணாபுரம் ரங்கநாதன் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 25. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சரவணம்பட்டி அருகே, சத்தி ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த சரக்கு லாரி, செல்வராஜ் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். வழக்கு பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு(கிழக்கு) போலீசார், சரக்கு லாரி டிரைவர் சத்தியமங்கலம், வடக்குபட்டியை சேர்ந்த அஜீத், 24 என்பரை கைது செய்தனர்.மது விற்ற 20 பேர் கைதுகோவை: கோவையில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய சோதனையில், பல்வேறு பகுதிகளில் கடைகளில் மறைத்து விற்பனை செய்யப்பட்ட, 256 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த, 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், கோவையின் பல்வேறு பகுதிகளிலும், டாஸ்மாக் கடை அருகே இரவு 10:00 மணிக்கு மேல் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்ததாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X