பரமக்குடி : பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி கிராம பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இன்றி மக்கள் ஆட்டோவில் ஆபத்தான பயணம் மேற்கொண்டுஉள்ளனர்.
பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நயினார் கோவில், போகலுார், பரமக்குடி ஆகிய ஒன்றியங்களில் நுாற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. மேலும் பரமக்குடியில் இருந்து அருகிலுள்ள முதுகுளத்துார் தாலுகா மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.பரமக்குடி பணிமனையில் இருந்து 35 பஸ்கள்வரை டவுன் பஸ்கள் ஆக இயக்கப்படுகிறது. இவற்றில் நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே பஸ்கள் செல்லும் பகுதிகள்உட்பட, ஒரே பஸ்கள் தொடர்ந்து ஓய்வின்றி அடுத்தடுத்த கிராமங்களுக்கும் சென்று வருகின்றன.
சத்திரக்குடி பகுதியில்இருந்து 30 கி.மீ., சுற்றளவை உள்ளடக்கிய கிராமங்களுக்கு பஸ் வசதியின்றி மக்கள் ஷேர் ஆட்டோக்களை நம்பியுள்ளனர்.இவற்றில் 5 பேர் மட்டுமே அமரக்கூடிய நிலையில் 10 பேருக்கு மேலும் குழந்தைகளுடன் பயணிக்கின்றனர்.போக்குவரத்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகத்தினர் கண்டுகொள்ளாமல் உள்ளதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE