கோவை, அரசு மருத்துவ கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரும் பிப்.,15ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதையடுத்து, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, உணவகம், மற்றும் இருப்பிடங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களும் தொற்று பரவாமல் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என டீன் காளிதாஸ் தெரிவித்தார்.
சித்தாவில் 1,700 பேர் நலம்!கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்புள்ளவர்கள் மருத்துவமனைகளிலும், அறிகுறி வெளிகாட்டாத கொரோனா தொற்றுள்ளவர்கள், கொடிசியா போன்ற சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடிசியாவில் சித்தா சிகிச்சைக்கு விருப்பமுள்ளவர்களுக்கு பிரத்யேகமாக, மருந்து, மாத்திரை மற்றும் லேகியம் வழங்கப்படுகிறது. இதுவரை, 1,700க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாக, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் கூறினார்.காங்., நிர்வாகிகள் தேர்வு!தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினராக முன்னாள் மேயர் வெங்கடாசலம், மாநில பொது செயலாளராக பச்சைமுத்து, மாநில செயலாளர் மற்றும் தேர்தல் விளம்பர பணிக்குழு உறுப்பினராக காயத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான, அறிவிப்பை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.முக கவசம் அணியாததால் 'பைன்'கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சித்தாபுதுார், சின்னசாமி நாயுடு வீதியில், முகக்கவசம் அணியாமல் இருந்த, தனியார் கடை ஊழியர்கள் ஐந்து பேருக்கு, தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார். சாலையோரம் கிடக்கும் தேவையற்ற பொருட்கள், பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த, அலுவலர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE