பட்டிதொட்டியெல்லாம் பொங்கல் பண்டிகை களைகட்ட துவங்கி விட்டது. குட்டீஸ் முதல் பெரியவர் வரை அனைவரும் சர்க்கரை பொங்கலை சுவைக்க ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காகவே கடைவீதிகளில் வெல்லம் விற்பனை சூடுபறக்க துவங்கி விட்டன.ஆனாலும், நாம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் வெல்லம் உண்மையில் தரமானதுதானா? என்ற சந்தேகம் அனைவரும் உண்டு.இதோ உங்களுக்கான சில டிப்ஸ்...கரும்பை ஆலையில் அரைத்து சாறை காய்ச்சி, பக்குவமாக பாகு செய்து, அச்சுப்பலகையில் ஊற்றி எடுத்தால் அதன் நிறம் அடர் கறுநிறத்தில் அச்சுவெல்லம் கிடைக்கும். உண்மையில் இதுவே நஞ்சில்லா வெல்லம்.கரும்புச்சாறு காய்ச்சும்போது கசடுகளை சுத்தப்படுத்த சோடியம் ஹைட்ரோ சல்பேட் ரசாயனம் கலக்கப்படுகிறது. காய்ச்சப்படும் வெல்லம் கண்கவர் நிறத்தில் இருக்க வேண்டும் என்று ரசாயனங்களை சேர்த்துத்தான் இன்றைக்கு கிடைக்கும் வெல்லம், சர்க்கரை இரண்டும் தயாரிக்கப்படுகிறது. இது, நமக்கு கெடுதலையே விளைவிக்கும்.நல்ல வெல்லம் என்பது கறுஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும்; மென்மையாக இருக்காது. இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில கரும்பு ரகங்களில் தயாரிக்கப்படும் வெல்லம், வெளிர் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். அதையும் கேட்டு தெரிந்துதான் வாங்க வேண்டும். வெல்லத்தை வாயில் போட்டால் உப்பு சுவை இருக்க கூடாது. உடனே கரைய வேண்டும்.வெல்லக்கட்டி ஒன்றை எடுத்து தரையில் போட்டால், சிறிது நேரத்தில் உருகும் அந்த கட்டியை எறும்பு மொய்க்க வேண்டும். அப்படி இருந்தால் அது நல்ல வெல்லம். அப்படி உருகாமல் கல்லைப்போல தரையில் கிடந்தால் அது ரசாயனம் கலந்த வெல்லம்.இன்று பெரும்பாலானோர் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள வெல்லமே நல்லது என, ஏமாந்துவிடுகின்றனர். மக்களும் பளீர் நிறத்தில் மயங்காமல் கறுஞ்சிவப்பு நிறத்தில் உள்ள வெல்லத்தை வாங்கி, ஆரோக்யமான பொங்கலை கொண்டாடுங்கள்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE