சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து 2020ல் 'சைல்டு லைன்'க்கு 522 புகார் வந்தது.இதில் 104 குழந்தை திருமணத்தை நிறுத்தி, பெண் குழந்தைகளை பாதுகாத்துள்ளனர்.
பெண் குழந்தை இருக்கும் வீடு, பசுமை நிறைந்த நந்தவனம். பூக்கள் சிரிக்கும் பூங்காவனம். சோம்பேறி மனிதனை கூட உழைக்க வைக்கும் எந்திரம். சோர்வடைந்து மனம் தளர்ந்தால் புத்துணர்வு பொங்கி வர செய்யும் பொன்மகள். பெண் குழந்தை உள்ள வீடு ஒரு சிறு கோயில்,'' என கவிஞர்கள் வர்ணிக்கின்றனர். பெண் குழந்தைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து அரசும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில், 'சைல்டு லைன்' திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக 2020ல் 522 புகார் வந்துள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுத்து பெண் குழந்தைகளை 'சைல்டு லைன்' அமைப்பினர் பாதுகாத்துள்ளனர்.104 குழந்தை திருமணம் நிறுத்தம்மாவட்டத்தில் 104 குழந்தைகள் திருமணம், சமூக நலத்துறை, மகளிர் போலீசார் மூலம் தடுத்துள்ளனர். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட 26 குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு எதிராக செயல்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து காணாமல் போன 15 பேரை மீட்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கொத்தடிமையாக இருந்து ஒரு சிறுமியை மீட்டு, கல்விச்சாலைக்கு அனுப்பினர். வீட்டை விட்டு வெளியேறிய 20 குழந்தைகள், பாதுகாப்பின்றி இருந்த 42 குழந்தைகள் நிரந்தரமாக சமூக பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.பிச்சை எடுத்த 13 பேர் மீட்பு மாவட்ட அளவில் பொது இடத்தில் பிச்சை எடுத்த 13 சிறுவர், சிறுமிகளை மீட்டு, கல்விச்சாலையில் சேர்த்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE