மானாவாரி அறுவடையில் சுணக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி அறுவடையில் சுணக்கம்

Added : ஜன 09, 2021
Share
திருப்பூர்:கார்த்திகை மாதம் துவங்கும் பனிப்பொழிவு மார்கழி - தை மாதம் வரை நீடிக்கும். அதிகாலையில், நடுங்க செய்யும் குளிரில் எழுந்து, பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகம் புறப்பட்டு செல்வது புதிய அனுபவமாக இருந்து வந்தது.வடகிழக்கு பருவமழை விடை கொடுத்த பின், குளிர் பருவம் துவங்கும். கார்த்திகை மாதத்தில் இருந்து, நடுநடுங்கும் அளவுக்கு, பனிப்பொழிவு இருக்கும். இதுவரை இல்லாத

திருப்பூர்:கார்த்திகை மாதம் துவங்கும் பனிப்பொழிவு மார்கழி - தை மாதம் வரை நீடிக்கும். அதிகாலையில், நடுங்க செய்யும் குளிரில் எழுந்து, பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகம் புறப்பட்டு செல்வது புதிய அனுபவமாக இருந்து வந்தது.வடகிழக்கு பருவமழை விடை கொடுத்த பின், குளிர் பருவம் துவங்கும். கார்த்திகை மாதத்தில் இருந்து, நடுநடுங்கும் அளவுக்கு, பனிப்பொழிவு இருக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தாண்டு மார்கழி மாதம் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.மார்கழி மாதம் துவங்கி நேற்றுடன், 25 நாட்கள் ஓடிவிட்டது; பெரும்பாலான நாட்கள், குளிரும், பனியும் இல்லாத நாட்களாகவே சென்றுவிட்டன.விவசாயிகள் கூறுகையில், 'குளிர்மழை அதிகமாக பெய்தால், சோளக்கதிர் முளைத்து விடும். மழை பெய்து வருவதால், மானாவாரி பயிர் அறுவடை பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X