சிவகங்கை : மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு ஞானஅற்புதராஜ், சிங்கராயர், ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கோரிக்கையை விளக்கி பேசினார்.மாவட்ட பொருளாளர் குமரேசன், துணை தலைவர் அமலசேவியர், துணை செயலாளர்கள் ரவி, ஜெயக்குமார் பங்கேற்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார்.தீர்மானம்: மறைந்த முதல்வர் ஜெ., அறிவித்தபடி பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவர வேண்டும்.
மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE