ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் ரெகுநாதபுரம், போகலுார் கோயில்களில் நம்ம ஊரு பொங்கல் விழா நடந்தது.
மாநிலத் தலைவர் முருகனுக்கு வரவேற்பு அளித்தனர். தமிழர்களின் பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகளான கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் நடந்தது. ரெகுநாதபுரம்முத்துநாச்சியம்மன் கோயிலில் பெண்கள் பொங்கலிட்டனர். அ.தி.மு.க., தி.மு.க., காங்., உள்ளிட்ட கட்சிகள், விஜய் ரசிகர் என 500க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.வில் இணைந்தனர்.
மாநில செய்தி தொடர்பாளர் குப்புராமு, தேசியக்குழு உறுப்பினர் நாகராஜன், பட்டியல் அணி மாநில தலைவர் பொன்கணபதி, மாநில செயலாளர் சண்முகராஜா, திருவாடானை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் குட்லக் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் முரளிதரன், ராமநாதபுரம் லட்சுமி மருத்துவமனை டாக்டர் மனோஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன், நகரத்துணை தலைவர் வீரசேகரன், செயலாளர்கள் முருகராஜா, கார்த்திகேயன், மகளிர்அணி நகர தலைவி மலர்விழி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜி.குமார், பி.குமார், பொருளாளர்கள் சுந்தரமுருகன்,கணபதி, துணைத்தலைவர்கள் சுந்தரராஜன், முருகேசன், நாகேந்திரன், ரமேஷ்பாபு, ராமஅமிர்தம்மாள், ராஜேஸ்வரி, லட்சுமிதேவி, விஜயராணி, மாவட்ட செயலாளர்கள் ராமசாமி, முத்துச்சாமி, மணிமாறன், கேசவன், வடிவேலு, செல்வராணி, மணிமேகலை, காயத்ரி உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பல்வேறு சமுதாயத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பரமக்குடிசத்திரக்குடி ஓட்டமடகாளியம்மன் கோயில் அருகில் பா.ஜ., சார்பில் நடந்த பொங்கல் விழாவில்500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் பானை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.பா.ஜ., மாநில தலைவர் முருகன் பங்கேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் குமார், போகலுார் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், மாவட்ட பொருளாளர் கணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்கர், மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் வக்கீல்பிரபு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் வைரம் ஜீவானந்தம், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE