ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவு: கேள்விக்குறியாகும் சுகாதாரம்

Added : ஜன 09, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், நொய்யல் ஆற்றில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் நகரின் மத்தியில் ஓடும் நொய்யல் ஆற்றில், சாயக்கழிவு, சாக்கடை கழிவுகள் கலப்பதோடு, கட்டட கழிவு, மீன், இறைச்சி கழிவு, குப்பையும் கொட்டப்படுகின்றன. இரவு நேரங்களில், ஆங்காங்கே, 'செப்டிக் டேங்க்' கழிவுகளும் கொட்டப்பட்டு, ஆறு

திருப்பூர்:திருப்பூரில், நொய்யல் ஆற்றில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் நகரின் மத்தியில் ஓடும் நொய்யல் ஆற்றில், சாயக்கழிவு, சாக்கடை கழிவுகள் கலப்பதோடு, கட்டட கழிவு, மீன், இறைச்சி கழிவு, குப்பையும் கொட்டப்படுகின்றன. இரவு நேரங்களில், ஆங்காங்கே, 'செப்டிக் டேங்க்' கழிவுகளும் கொட்டப்பட்டு, ஆறு நாசப்படுத்தப்படுகிறது.
நகரில், சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள், மின் மயானம் அருகே, மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது.இது ஒருபுறமிருக்க, மங்கலம் அடுத்த நொய்யல் கரையோரத்தில், பல பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் இறைச்சிக் கழிவுகள், மூட்டையாக வீசப்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசப்படுவதுடன் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து, பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்படாமல் உள்ளனர்.தன்னார்வலர்கள் கூறுகையில், 'ஆற்றில் கழிவு கொட்டும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது போலீசில் புகார் செய்வதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அபாயகரமான பொருட்களை நீர் நிலைகளில் கொட்டுவதை தடுக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X