ராமநாதபுரம் : கமுதி அருகேயுள்ள தோப்புலாப்பட்டியைசேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவர் குமரேசன்21. இவர் 2020 ஜூலையில் இணையதளம் மூலம் பழைய கார் வாங்க முயன்றார்.
அப்போது இணையதள நிறுவன பெயரில் சிலர் அறிமுகமாகியுள்ளனர். அவர்களிடம் பழைய கார் வாங்க குமரேசன் குறிப்பிட்ட சிலரின் வங்கிக்கணக்கில் ரூ.1.60 லட்சம் செலுத்தியுள்ளார். குமரேசன் அலைபேசியில் விளக்கம் கேட்டபோது அவர்கள் இணைப்பை துண்டித்து விட்டனர். இதுகுறித்து குமரேசன் அளித்த புகாரில் ஊர், முகவரி தெரியாத தினேஷ்குமார், ராமேஸ்வர்தயாள், தவேராசிங் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE