பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் ‛நம்ம ஊரு பொங்கல் விழா

Added : ஜன 09, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் பா.ஜ., சார்பில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல்வைத்து 'நம்ம ஊரு பொங்கல் விழா' வை கொண்டாடினர். விழாவிற்கு பா.ஜ., மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.நகர் தலைவர் தனசேகரன் வரவேற்றார். மாநில தலைவர் முருகன்,தேர்தல் அறிக்கை குழு தலைவர் எச்.ராஜா, மாநில துணைதலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு சொக்கலிங்கம், சிவகங்கை சட்டசபை

சிவகங்கை : சிவகங்கையில் பா.ஜ., சார்பில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல்வைத்து 'நம்ம ஊரு பொங்கல் விழா' வை கொண்டாடினர்.

விழாவிற்கு பா.ஜ., மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.நகர் தலைவர் தனசேகரன் வரவேற்றார். மாநில தலைவர் முருகன்,தேர்தல் அறிக்கை குழு தலைவர் எச்.ராஜா, மாநில துணைதலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு சொக்கலிங்கம், சிவகங்கை சட்டசபை பொறுப்பாளர் சத்தியநாதன், மார்த்தாண்டன், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சசிக்குமார், மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன், மகளிரணி தலைவர் கோமதி நாச்சியார், செயலாளர் சுகனேஸ்வரி, இளைஞரணி தலைவர் நாகேஷ்வரன் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விழாவில் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உட்பட கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பா.ஜ., சார்பில் பெண்களுக்கு இலவசமாக வழங்கிய பொங்கல் பானை, அரிசி, பருப்பால் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் ஜல்லிக்கட்டு காளைகள் வரவழைக்கப்பட்டது. அதில் சிறந்த காளையான அலவாக்கோட்டை ராதாகிருஷ்ணன் என்பவரது காளைக்கு பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை மாவட்ட பா.ஜ.,வினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X